பொது செய்தி

இந்தியா

பாகூர் அரசு பள்ளியில் புது வகுப்பு புகு விழா

Added : ஜூன் 12, 2019
Advertisement
 பாகூர் அரசு பள்ளியில் புது வகுப்பு புகு விழா

பாகூர்:பாகூர் அரசு பெண்கள் தொடக்கப் பள்ளியில், புது வகுப்பு புகுவிழா நடந்தது.விழாவிற்கு, ஆசிரியர் அருள்மொழி வரவேற்றார். மூன்றாம் வட்ட பள்ளித் துணை ஆய்வாளர் பக்கிரிசாமி தலைமை தாங்கி, பள்ளியின் செயல்பாடுகள், கல்வித் துறையின் மூலம் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சலுகைகள் குறித்து கூறினார்.
மாணவர்களுக்கு பூங்கொத்து மற்றும் இனிப்புகள் வழங்கி ஆசிரியர்கள் வரவேற்பு அளித்தனர். தனவேலு எம்.எல்.ஏ., மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் எழுது பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் முத்துசாமி நோக்கவுரையாற்றினார். தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சுதா, லோகேஸ்வரி, குமாரி, செல்வி, காயத்ரி, கண் ணன், தனபூசணி ஆகி யோர் செய்து இருந்தனர். ஆசிரியர் திருமதி மேகலா நன்றி கூறினார்.இதே போல், பாகூர் பேட் அரசு தொடக்கப்பள்ளியில் நடந்த புது வகுப்பு புகு விழாவில், மாணவ- மாணவிகளை, தாரை தப்பட்டை முழங்கிட ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டனர். மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் பூங்கொத்து மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்று வகுப்பிற்கு அழைத்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X