பொது செய்தி

இந்தியா

நகராட்சி நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Added : ஜூன் 12, 2019
Advertisement
 நகராட்சி நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி:நகராட்சி நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து, புதுச்சேரி, உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் நலச்சங்கத்தினர், விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உழவர்கரை நகராட்சி அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். செயலர் சகாயராஜ் முன்னிலை வகித்தார். கவுரவ தலைவர் வீரமுத்து, துணை தலைவர்கள் ரங்கநாதன், கதிரேசன், ஆலோசகர் அய்யப்பன் கண்டன உரையாற்றினர்.ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு சம்பவ உயர்விற்கான அரியர்ஸ் கடந்த 2016ம் ஆண்டு ஜன., முதல் 2018ம் ஆண்டு அக்., 2ம் தேதி வரையுள்ள காலத்திற்கு வழங்க உத்தரவு வெளியிட வேண்டும். பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் பணியின் போது இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு 7 வது ஊதியக்குழு பென்சன் உயர்விற்கான உத்தரவு வெளியிடுதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், நகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்தையொட்டி, உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் 100க் கும் மேற்பட்டோர் நேற்று ஒரு நாள் விடுப்பு எடுத்து, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். பொருளாளர் சரவணன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X