பெண்ணை தாக்கிய தம்பதி

Added : ஜூன் 12, 2019
Advertisement

புதுச்சேரி:பெண்ணை தாக்கிய தம்பதியை போலீசார் தேடிவருகின்றனர்.திலாஸ்பேட்டையை சேர்ந்தவர்கள் அய்யனார், சுப்ரமணி. சகோதரர்கள். ஒரே வீட்டில் வசித்து வந்த இவர்களுக்குள் மின் கட்டணம் மற்றும் தண்ணீர் வரி செலுத்துவதில் தகராறு ஏற்பட்டது. இதனால், சுப்ரமணி வீட்டின் பின்புறத்தில் தனது தாய் கோமதி பெயரில் உள்ள இடத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார். இந்த வீட்டிற்கு பக்கத்து வீட்டை சேர்ந்த ஜெகதீசன் மின் சப்ளை கொடுத்துள்ளார்.இதனை அறிந்த கோமதி, ஜெகதீசன் குடும்பத்தினரை திட்டினர். ஆத்திரமடைந்த ஜெகதீசன் அவரது மனைவி தனம் ஆகியோர் நேற்று முன்தினம் அய்யனார் மனைவி கனகவள்ளியை தாக்கினர்.இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிந்து, ஜெகதீசன், தனத்தை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X