பொது செய்தி

இந்தியா

நடைபாதை ஆக்கிரமிப்பு: கலெக்டர் திடீர் ஆய்வு

Added : ஜூன் 12, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
 நடைபாதை ஆக்கிரமிப்பு: கலெக்டர் திடீர் ஆய்வு

புதுச்சேரி:புதுச்சேரியில் ஆம்பூர், செஞ்சி சாலை நடைபாதையில் உள்ள திடீர் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து கலெக்டர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி, உப்பளம் தண்ணீர் தொட்டி - பட்டேல் சாலையில் உள்ள ஆம்பூர், செஞ்சி சாலைகளின் ஓரங்களில் உள்ள நடைபாதைகளை வியாபாரிகள் சிலர் எந்தவித லைசென்ஸ் இன்றி திடீர் கடைகள் வைத்துள்ளனர். இந்த கடைகளின் ஆக்கிரமிப்புகளால், நடைபாதைகளில் நடந்து செல்வோர் கூட போதிய இடமின்றி, வாகனங்கள் செல்லும் சாலைகளில் நடந்து செல்கின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படுகிறது.பொதுமக்களின் புகாரை யொட்டி, ஆம்பூர், செஞ்சி சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்துள்ள திடீர் கடைகளை அகற்றுவது சம்பந்தமாக நேற்று கலெக்டர் அருண் தலைமையில் சம்பவ இடத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். புதுச்சேரி நகராட்சி, பொதுப்பணித்துறை, காவல் துறை இணைந்து நாளை (13ம் தேதி) இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆய்வின் போது, துணை கலெக்டர் சுதாகர், புதுச்சேரி நகராட்சி ஆணையர் ராமகிருஷ்ணன், செயற்பொறியாளர் ராஜாராம், உதவி பொறியாளர்கள் மலைவாசன், பழனிராஜா, பொதுப்பணித்துறை பொறியாளர் தேவதாஸ், எஸ்.பி.,க்கள் முருகவேல், மாறன், இன்ஸ்பெக்டர்கள் முருகையன், செந்தில்குமார் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
12-ஜூன்-201908:21:19 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj காஞ்சிபுரம் மாவடட நிர்வாகம் இந்த செய்தியை மீள மீள படிக்கும் விதத்தில் அனுப்புங்கள் காஞ்சிபுரம் காப்பாற்றப்படும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X