பொது செய்தி

இந்தியா

எழுத்து பிழை கல்வெட்டுகள் அகற்றம்

Added : ஜூன் 12, 2019
Advertisement
 எழுத்து பிழை கல்வெட்டுகள் அகற்றம்

புதுச்சேரி:புதுச்சேரி நகரின் பல்வேறு இடங்களில் எழுத்துப் பிழையுடன் வைக்கப்பட்ட வீதிகள் பெயர் பொறித்த கல்வெட்டுகளை தினமலர் செய்தி எதிரொலியால் அதிகாரிகள் அகற்றினர்.
புதுச்சேரியில் உள்ள பல தெருக்களின் பெயர் பின்னணியில் பிரெஞ்ச் வரலாறு மறைந்துள்ளது. தெருக்களுக்கு பெயர் சூட்டப்பட்ட காரணம், வரலாற்று பின்னணி குறித்து அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில், சுற்றுலாத் துறை சார்பில், கல்வெட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது.இந்த கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ள தமிழில் எழுத்து பிழைகள் நிறைய உள்ளன. குறிப்பாக, குபேர் சாலையில் பதிக்கப்பட்டுள்ள கல்வெட்டில், புதுச்சேரியின் முதல் முதல்வராக இருந்த 'பப்பா' என்று அன்புடன் அழைக்கப்பட்ட குபேரை 'பாப்பா' குபேர் என்றும், ஆவணக் காப்பகம் அருகில் சுவற்றில் பதிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் 'பாண்டிச்சேரி' என்பதற்கு பதிலாக 'பண்டிச்சேரி' என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை படிக்கும் மக்கள் முகம் சுளித்தனர்.கல்வெட்டில் இடம் பெற்றுள்ள தமிழ் எழுத்து பிழைகளை நீக்குவதற்கு, அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அரசுக்கு, தமிழறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து கடந்த மாதம் 17ம் தேதி, 'கல்வெட்டில் எழுத்துப் பிழை அரசு நடவடிக்கை எடுக்குமா' என்ற தலைப்பில் தினமலரில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, புதுச்சேரி நகரில் எழுத்துப் பிழையுடன் வைக்கப்பட்ட வீதிகளுக்கான பெயர் பொறித்த கல்வெட்டுகளை அதிகாரிகள் அகற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X