பொதுக்கழிப்பிடம் பயன்பாட்டிற்கு வருமா?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பொதுக்கழிப்பிடம் பயன்பாட்டிற்கு வருமா?

Added : ஜூன் 12, 2019

புதுச்சேரி:செம்பியப்பாளையம் காலனியில் திறப்பு விழா செய்யப்பட்ட பொதுக்கழிப்பிடம், 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரையில் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல், சேதமடைந்து வருகிறது.
ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட செம்பியப்பாளையம் காலனியில் நுாறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள், இயற்கை உபாதைகளை கழிக்க, நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செம்பியப்பாளையம் கரும காரிய கொட்டகை அருகாமையில் ஆண்கள், பெண்களுக்கான பொதுக் கழிப்பிடம் கட்டடம் கட்டப்பட்டது.கழிப்பிடத்தின் கட்டுமான பணிகள் முடிவடைந்து, கடந்த 2009ம் ஆண்டு திறப்பு விழா செய்யப்பட்டது. திறப்பு விழா செய்யப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரையில் பொதுக் கழிப்பிடம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்படவில்லை.இதனால், அப்பகுதி மக்கள் வேறுவழியின்றி, பொது கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ள சாலையோரங்களை, திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, பூட்டி கிடக்கும் கழிப்பிடத்தை சீரமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X