முதியவரை தாக்கியவர் தலைமறைவு

Added : ஜூன் 12, 2019
Advertisement

புதுச்சேரி:கொடுத்த பணத்தை கேட்ட முதியவரை தாக்கிய தொழிலாளியை போலீசார் தேடிவருகின்றனர்.
புதுச்சேரி, தர்மாபுரியை சேர்ந்தவர் அழகப்பன்,38; கூலி தொழிலாளி. இவரது மனைவி சித்ரா. இவர், அதேபகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற மில் ஊழியர் மாரிமுத்து,62; என்பவரிடம் பணம் கடன் வாங்கியிருந்தார். நீண்ட நாட்களாகியும், சித்ரா பணத்தை தரவில்லை.நேற்று முன்தினம், செட்டிதெரு வழியாக சென்ற சித்ராவிடம், மாரிமுத்து பணத்தை கேட்டார். அப்போது, அங்கு வந்த அழகப்பன், எனது மனைவியிடம் எப்படி பேசலாம் எனக் கேட்டு மாரிமுத்துவிடம் தகராறு செய்து, மரக்கட்டையால் தாக்கினர்.இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து அழகப்பனை தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X