பொது செய்தி

இந்தியா

பசுமை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Added : ஜூன் 12, 2019
Advertisement

புதுச்சேரி:புதுச்சேரியில் பசுமை விருது வழங்குவதற்காக சுற்றுச்சூழல் பணிகளில் ஈடுபட்டோர் மற்றும் தொழிற்சாலைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் செயலர் ரவிபிரகாஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழு, இந்தாண்டு வரும் ஆக., 15ம் தேதி சுதந்திர தின விழாவில், புதுச்சேரி யூனியன் பிரதேச சுற்றுச்சூழலை காக்கவும், இதற்கான பணிகளில் குறிப்பிடத்தக்க அளவு பணியாற்றிய மற்றும் மாசை கட்டுப்படுத்த நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்திய தொழிற்சாலைக்கு 'பசுமை விருது' ஒன்று வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.சுற்றுச்சூழல் பற்றிய பணிகளில் சிறப்பாக பணியாற்றிய தொழிற்சாலையை தேர்வு செய்ய முன்மொழிவுகள், பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.இதற்கான விண்ணப்ப படிவம் இந்த துறையின் அலுவலகத்தில் இருந்தும், மற்றும் காரைக்கால் பிராந்திய அலுவலகத்தில் இருந்தும் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ இலவசமாக பெற்று கொள்ளலாம்.இந்த குழுமத்தின்http://dste.py.gov.inஎன்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், உறுப்பினர் செயலர், புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழு, அண்ணா நகர், புதுச்சேரி என்ற முகவரிக்கு வரும் ஜூலை 5ம் தேதிக்கு முன்னதாக கிடைக்கும் படி அனுப்ப வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X