பொது செய்தி

தமிழ்நாடு

அன்னூர் புறவழிச்சாலைக்கு நிலம் ஆர்ஜிதம்: கோவையில் கருத்து கேட்பு கூட்டம்

Added : ஜூன் 12, 2019
Advertisement

கோவை:அன்னுாரில் புறவழிச்சாலைக்கு நிலம் எடுக்கும் அரசு முடிவு தொடர்பாக, கோவையில் நேற்று கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலையை, அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, போக்குவரத்து நெரிசல் மிகுந்த அன்னுாரில் புறவழிச்சாலை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.கரியாம்பாளையத்தில் இருந்து பசூர் வரை, 8.9 கிலோமீட்டர் நீளத்துக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கென, வழியோர கிராமங்களில், 90 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது.நிலம் எடுக்கப்பட உள்ள கிராமங்களில், விவசாயிகளின் கருத்து கேட்பு கூட்டத்தை, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் நடத்துகிறது. கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த கருத்து கேட்பில், கரியாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த, 50 விவசாயிகள் பங்கேற்றனர்.மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன் தலைமை வகித்தார். விவசாயிகளிடம் பேசிய அவர், 'மக்கள் நலன் கருதி, அரசு மேற்கொள்ளும் திட்டத்துக்கு விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்தார்.'அன்னுாரில், புறவழிச்சாலை அமைக்காமலேயே, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியும். தற்போதுள்ள சாலையில் இருக்கும், ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே போதும்' என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
அத்துடன், தங்கள் ஆட்சேபத்தை மனுவாக எழுதி, அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன் கூறுகையில், ''கரியாம்பாளையம் கிராம விவசாயிகள் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர். மற்ற கிராம விவசாயிகளிடமும் விரைவில் கருத்து கேட்கப்படும்,'' என்றார்.கரியாம்பாளையத்தில் இருந்து பசூர் வரை, 8.9 கிலோமீட்டர் நீளத்துக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கென, வழியோர கிராமங்களில், 90 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X