கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ரூ.10 கோடி ஏமாற்றியவருக்கு போலீஸ் 'கஸ்டடி' விசாரணை

Added : ஜூன் 12, 2019
Advertisement

திருப்பூர்:வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி, ஏறத்தாழ, 10 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்த வழக்கில், உரிமையாளரிடம் விசாரணை நடத்த, இரண்டு நாள் 'கஸ்டடி'க்கு கோர்ட்டு அனுமதி அளித்தது.திருப்பூர், அவிநாசி ரோடு புஷ்பா சந்திப்பில் 'டிராவல் கிராப்ட்' என்ற நிறுவனத்தில் வெளிநாடு சுற்றுலா செல்வதற்காக நுாற்றுக் கணக்கானோர் பணம் செலுத்தியிருந்தனர். ஆனால், உரிமையாளர் தலைமறைவானார்.
பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நிறுவனத்தின் உரிமையாளர் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இவ்வழக்கு தொடர்பாக தொடர்ந்து புகார்கள் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த வண்ணம் இருந்தது.இதனால், போலீஸ் 'கஸ்டடி'யில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து, ஐந்து நாள் 'கஸ்டடி' எடுத்து விசாரிக்க, ஜே.எம்:1 கோர்ட்டில் போலீசார் அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மணிகண்டனை, இரண்டு நாள் 'கஸ்டடி' எடுத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் அனுமதியளித்தார். விசாரணையில் முடிவில், மோசடி குறித்தும், தலைமறைவான மனைவி குறித்து தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X