அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவை விமான நிலையம் பழைய திட்டப்படியே விரிவாக்கம்!

Added : ஜூன் 12, 2019
Advertisement

கோவை:கோவை விமானநிலைய ஆரம்ப கட்ட விரிவாக்கம், 627.89 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்படுவதாக இருந்தது. நில உரிமையாளர்களில் ஒரு தரப்பினர், நிலத்தை கொடுப்பதில் பிரச்னை செய்து வந்தனர். மாநில அரசு மற்றும் விமான நிலைய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, அரசு வழங்கும் இழப்பீட்டை பெற்றுக்கொண்டு, இடத்தை வழங்க அவர்கள் முன்வந்தனர்.
அதே சமயத்தில், கையகப்படுத்தப்படும் பரப்பளவு சுருக்கப்பட்டு, 365 ஏக்கரில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ள இருப்பதாக விமான நிலைய ஆணையம் சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தது. இதற்கு கோவையை சேர்ந்த தொழில், வர்த்தக அமைப்பினர் ஆட்சேபம் தெரிவித்தனர். 'பெரிய அளவிலான விமானங்களும், சரக்கு விமானங்களும் வந்துசெல்ல வசதியாக இருக்காது. சர்வதேச விமான போக்குவரத்துக்கும் இது போதுமானதாக இருக்காது,' என்று அவர்கள் வாதிட்டனர்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர்களிடமும் முறையிட்டனர்.மத்திய அமைச்சர் வேலுமணியும் அப்போதே இதுதொடர்பாக மத்திய அரசிடம் முறையிட்டார். இப்போது மீண்டும் மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைத்திருக்கும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். '627.89 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்படுவதாக இருந்த விமான நிலைய விரிவாக்கம், 365 ஏக்கராக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதனை முன்பிருந்தபடியே 627.89 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்த வேண்டும்,' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X