கோவை: கோவையில், அன்புநகர், உக்கடம், குனியமுத்துார் உள்ளிட்ட 8 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
உக்கடத்தில் அசாரூதீன், போத்தனுாரில் சதாம், அக்ரம் ஜிந்தா ஆகியோர் வீடுகளில் இன்று(ஜூன் 12) காலை 6 மணி முதல் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இலங்கையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு காரணமானவர்களுடன் சமூக வலைதளத்தில் தொடர்பு வைத்திருந்ததாக வந்த தகவல் கிடைத்ததை தொடர்ந்து சோதனை நடந்ததாக என்.ஐ.ஏ., வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், இந்த சோதனையில் பென்டிரைவ் உள்ளிட்ட சில பொருட்கள் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனை வைத்து, இலங்கையில் தாக்குதல் நடத்தியவர்களுடனும், தடை செய்ய அமைப்பினருடனும், எத்தனை நாட்கள் தொடர்பு வைத்திருந்தனர் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
