இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

Updated : ஜூன் 12, 2019 | Added : ஜூன் 12, 2019 | கருத்துகள் (7)
Advertisement
இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

புதுடில்லி: இரண்டாவது முறையாக, பிரதமர் மோடி பதவியேற்றபின், டில்லியில், இன்று முதல் முறையாக, மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்கிறது.

சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது.இதையடுத்து, இரண்டாவது முறையாக, பிரதமராக மோடி, கடந்த, 30ல் பதவியேற்றார்; அவருடன், 57 அமைச்சர்களும் பதவியேற்றனர்.இதன் பின், மத்திய கேபினட் அமைச்சர்கள் கூட்டம், மே, 31ல் நடந்தது. இந்த கூட்டத்தில், விவசாயிகள் அனைவருக்கும், ஆண்டுக்கு, 6,000 ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதற்கிடையே, பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர், வரும், 17ல் துவங்கி, ஜூலை, 26 வரை நடக்கிறது. ஜூலை, 5ம் தேதி, 2019 - 20ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.இந்நிலையில், இரண்டாவது முறையாக, பிரதமராக மோடி பதவியேற்ற பின், மத்திய அமைச்சரவை கூட்டம், டில்லியில், இன்று நடக்கிறது.

அதற்கு முன், மத்திய கேபினட் கூட்டம் நடக்கிறது.இந்த கூட்டத்தில், 'பார்லி., கூட்டத்தொடர் பற்றியும், உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, அமைச்சர்கள் பதில் அளிப்பது பற்றியும் விவாதிக்கப்படும்' என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.மேலும், மத்திய அரசின், அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டங்கள் பற்றி, அமைச்சரவை கூட்டத்தில், பிரதமர் மோடி தெரிவிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
12-ஜூன்-201909:47:30 IST Report Abuse
RajanRajan REFORM TAKES YOU TO THE DESTINATON மோடி என்ற ஒற்றை மனிதரால் பாகிஸ்தான் அலறுகிறான் இலங்கை எல்லை தாண்டினாலும் சுட பயப்படுகிறான் தீவிரவாதிகள் பதறுகிறார்கள் நக்ஸல்கள் சிதறுகிறார்கள் மாவோயிஸ்ட் அலறுகிறார்கள் கம்யூனிஸ்ட் கதறுகிறான் நம் அரசியல்வாதிகள் அரசியல் வியாபாரம் செய்யமுடியாமல் அலறுகிறார்கள். பெரிய பெரிய கம்பெனிகள் கடன் மேல் கடன் வாங்கியதை கடிவாளம் பொட்டு பிடித்ததால் அலறுகிறார்கள் மொத்த சொத்து பினாமி மனைவி மக்கள் மாமன் மாமி எல்லாம் பறிமுதலாகும் என்றவுடன் அலறி காசை தருகிறேன் என்கிறான் வங்கி கடன் வாரி கொடுத்தவன் வங்கி அதிகாரி அலறுகிறான் மத்திய அரசு ஊழியர்கள் பயோமெட்ரிக் வருகை பதிவேட்டை பார்த்து அலறுகிறார்கள் விமானநிலையம், கப்பல் போக்குவரத்து அதிகாரிகள் கண்காணிக்கபடுகிறார்கள் ஆனைக்கு பூனை எலிக்கு யானை தங்கத்திற்கு தகரம் தகரத்திற்கு தங்கம் அனுப்பமுடியாமல் அலறுகிறான். அனுப்புபவனும் பெறுபவனும் G S T யால் வரி ஏய்ப்பவன் அலறுகிறான் ஒரே பெயரில் பல கம்பெனி வைத்து அதில் பல மோசடிகள் செய்தவன் ஆதார் லிங்க் மூலம் இணைத்து வருமானவரியில் ஏய்த்தவன் எல்லா வங்கி கணக்கையும் காட்டவேண்டிய கட்டாயத்தில் அலறுகிறான் பணமதிப்பிழப்பால் பணம் பதுக்கி வைத்தவன் அலறுகிறான் மொத்த காசையும் வங்கியில் கட்டியாச்சி GST யில் வரியை கட்ட வச்சாச்சி வங்கி கணக்கை ஆதாரில் இணைத்தாச்சி இப்போ வருமான வரியை சரியா கட்டவச்சாச்சி பணமதிப்பிழப்பில் வங்கியில் உன் காசு இவ்வளவு. GST வியாபாரம் இவ்வளவு அல்லது உனது வருமானம் இவ்வளவு நீ சொத்து விற்ற காசு இவ்வளவு . ஆக மொத்தம் உன் மதிப்பு இவ்வளவு நீ எப்படி இதை வாங்கினாய் அதை வாங்கினாய் கணக்கை கொடு அவனும் அலறுகிறான் வியாபாரி நீ வாங்கிய பொருள் இவ்வளவு நீ விற்ற பொருள் இவ்வளவு என்று விற்றவனுக்கும் வாங்கியவனுக்கும் கணக்கு நெட்வொர்க்கில் இரண்டுபேருமே அலறுகிறான் இனி வாங்கியவன் கணக்கு பிள்ளையோ விற்றவன் கணக்குபிள்ளையோ தவறு செய்தால் என் ஆடிட்டர் லைசன்ஸ்கேன்சல் ஆயிடும் ஏமாற்றாதே என ஆடிட்டர் அலறுகிறான் அரசு ஆர்டர் எடுக்க முன்னால் மாங்காய் வியாபாரி தேங்காய்க்கும் தேங்காய் வியாபாரி மாங்காய்க்கும் டெண்டர் எடுப்பான இப்போ மாங்கா வியாபாரி மாங்காய் ஊறுகாய் மாம்பழம் சூஸ்க்கு மட்டுமே டென்டர் எடுக்கமுடியும் அவன் அலறுகிறான் சரியாக அனுபவம் இல்லாதவர்களுக்கு எந்த ஒப்பந்தமும் கிடையாது . அரசியல்வாதி பினாமி பெயரில் எடுப்பது தடைபட்டது அவனும் அலறுகிறான் இதனால் பெரிய பெரிய கம்பெனிகள் தான் அவர்கள் அனுபவத்தை வைத்து ஆர்டர் எடுக்கமுடியும் அனுபவமில்லாதவன் எடுக்கமுடியாது இதனால் L&,T Altom அம்பானி அதானி Relaliance , Software ல் TCS ,CTS ,HCL ஆர்டர் கொடுகப்படுகிறது உடனே . கார்பரேட் கைகூலி என்று.. கதறுகிறான் இப்போ புதிதாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் சொத்து மனைவி மக்கள் குடும்பம் அதாவது அம்மா அப்பா மாமன் மாமி பினாமி வண்டி வாகனம் கணக்கை காட்டவேண்டும் ஆக மொத்தமா எல்லோரும் அலறுகிறான் தள்ளுபடி செய்வார்கள் என்றே ஏமாற்ற நிலங்கள் 5 ஏக்கர் மேலே உள்ளவன் கடன் வாங்குகிறான் இது இவ்வளவு நாள் தள்ளுபடி ஆகியது மோடி 5 ஏக்கருக்கு குறைவான விவசாயிகளுக்கு மட்டுமே தள்ளுபடி, அவர்களுக்கு மட்டுமே சலுகை என்று அறிவித்தார். எனவே முதலாளி அலறுகிறான் ,NGO s வருமானத்தையும் போலி சாமியார்கள் வருமானம் சர்ச் ,மசூதி வருமானம் 20 லட்சத்திற்கு மேல் கணக்கு காட்டவேண்டும் அவனும் அலறுகிறான் கோவில் வருமானம் அரசே எடுக்கிறது அதனால் திருடமுடியவில்லை எனவே வருமானத்தை திருடமுடியாமல் கோவில் சிலையையே திருடுகிறான் அவனை தடுக்க சிலைதடுப்புபிரிவு நேர்மையான அதிகாரி அடுத்து இராணுவம் அவர்களுக்கு சரியான பாதுகாப்பு துப்பாக்கி உணவு பென்சன் விடுப்பு ஓய்வு ஊதியம் அதில் கமிஷன் அடிக்கமுடியாமல் புரோக்கர்கள் கதறுகிறான் .அலறுகிறான் இப்படி எல்லா குறுக்கு வழிகளையும் அடைத்ததால், அறிவுள்ள நல்லமக்கள் வாழ்த்தி வணங்கி மோடிஜியை போற்றுகின்றனர். மற்றவர்கள் தூற்றுகின்றனர் மோடி சர்கார்
Rate this:
Share this comment
Naga - Muscat,ஓமன்
12-ஜூன்-201912:16:34 IST Report Abuse
Nagaகுட், கோர்ட்ல கேஸ் இருப்பதால் பப்பு பேமிலியும், பப்பி பேமிலியும் கதறுகிறார்ள். காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் மாட்டு தீவன லாலு வெளியில் இருந்திருப்பார், மோடியால் டில்லி வாலு, bengal ஸ்பீட் பிரேக்கர் அலறுகிறார்கள்....
Rate this:
Share this comment
Guruvayur Mukundan - Guruvayur,இந்தியா
12-ஜூன்-201912:43:07 IST Report Abuse
Guruvayur MukundanExcellent and Brilliant comments. Congratulations...
Rate this:
Share this comment
Abdul Rahman - Madurai,இந்தியா
12-ஜூன்-201913:33:11 IST Report Abuse
Abdul Rahman@RajanRajan - Kerala,இந்தியா - வெரி குட். மிக சரியான தொகுப்பு. பாராட்டுக்கள்....
Rate this:
Share this comment
Cancel
Abdul Rahman - Madurai,இந்தியா
12-ஜூன்-201909:20:21 IST Report Abuse
Abdul Rahman இந்த Rs.6,000 வேண்டாம். நிரந்திர தீர்வுதான் வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
southindian - chennai,இந்தியா
12-ஜூன்-201909:07:09 IST Report Abuse
southindian ஆறுகளை இணைப்பதை துவக்குங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X