சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செல்போன்கள் திருடிய வாலிபர் கைது

Added : ஜூன் 12, 2019
Advertisement

உத்திரமேரூர்:உத்திரமேரூர் அடுத்த, பெருங்கோழி கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் உதயராஜ் 26. தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். உதயராஜ், 6ம் தேதி இரவு, வீட்டின் வளாகத்தில் உறங்கிக் கொண்டிருந்தார்.அதிகாலையில் பார்த்தபோது, அருகில் வைத்திருந்த அவரது விலை உயர்ந்த மொபைல்போன் காணாமல் போனது. இதுகுறித்து, உதயராஜ், உத்திரமேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, விசாரணை மேற்கொண்ட போலீசார், காவனுார் புதுச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் வினோத் 25 என்பவரை கைது செய்தனர்.அவரிடத்தில் விசாரணை மேற்கொண்டதில், உதயராஜ், மொபைல்போனை வினோத் திருடியது தெரிய வந்தது. மேலும், உத்திரமேரூரில் பல்வேறு இடங்களில் செல்போன் திருடியதையும் அவர் ஒப்பு கொண்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X