அதிகாரிகள் கூட்டங்களில் பங்கேற்கும் அரசியல்வாதிகள்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கூட்டங்களில் பங்கேற்கும் அரசியல்வாதிகள்

Added : ஜூன் 12, 2019

காஞ்சிபுரம்:அதிகாரிகள் மட்டும் பங்கேற்கும் ஆய்வு கூட்டங்களில், சமீப காலமாக, தி.மு.க., - அ.தி.மு.க., கட்சியினர் பங்கேற்கும் நடைமுறைகள் அதிகரித்து வருகின்றன.காஞ்சிபுரம், வரதர் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்தி வரதர் வைபவம், ஜூலை 1ல் துவங்குகிறது. இதை முன்னிட்டு, கலெக்டர் பொன்னையா தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.கோவில் நிர்வாகம் சார்பிலும், நிகழ்ச்சிக்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அறநிலையத் துறை அமைச்சர், சேவூர் ராமச்சந்திரன் தலைமையில், நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.கலெக்டர் பொன்னையா, எஸ்.பி.,சந்தோஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, சுகாதாரத் துறை, நகராட்சி நிர்வாகம், அறநிலையத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டங்களில், சமீப காலமாக, அரசியல்வாதிகளும் பங்கேற்று வருகின்றனர்.
அதிகாரிகள் பங்கேற்க வேண்டிய நேற்றைய கூட்டத்திலும், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க. , நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். அ.தி.மு.க., மாவட்ட செயலர் கணேசன், முன்னாள் எம்.பி.,பன்னீர்செல்வம், ரங்கநாதன் ஆகியோரும், திமுக சார்பில், நகர செயலர் ஆறுமுகம் மற்றும் நகர தி.மு.க.,வினர் பலரும் பங்கேற்றனர்.அதிகாரிகள், ஆய்வு கூட்டத்தில், மக்கள் பிரதிநிதிகளான காஞ்சிபுரம் எம்.எல்.ஏ.,பங்கேற்கலாம். ஆனால், அரசியல்வாதிகள் பங்கேற்கும் நடைமுறைகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்டு வருகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X