பொது செய்தி

இந்தியா

சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

Updated : ஜூன் 12, 2019 | Added : ஜூன் 12, 2019 | கருத்துகள் (13)
Advertisement
மாணவர்கள், கல்வி, உதவித்தொகை, நக்வி, மத்திய அரசு

புதுடில்லி: சிறுபான்மையின மாணவர்கள், ஐந்து கோடி பேருக்கு, அடுத்த ஐந்து ஆண்டுகளில், உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது. இதில், 50 சதவீதம், மாணவியருக்கு ஒதுக்கப்படும் என மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர், முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.

டில்லியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: நாட்டில் திருப்திபடுத்துதல் கொள்கை, மதவாதம் எனும் நோய் ஆகியவற்றிற்கு மோடி அரசு முடிவு கட்டிவிட்டது. மத்திய அரசு நீதி, நம்பகத்தன்மை, அதிகாரம் ஆகியவற்றுடன் செயல்படுவதை நிரூபித்து உள்ளது. உ.பி.,யில் ஜாதிக்கட்சிகளான பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதியை சிறுபான்மையின மக்கள் நிராகரித்து விட்டனர்.






சிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்தவர்களின் சமூக பொருளாதாரம், கல்வி அதிகாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரம் பெறுவது உறுதி செய்யப்படும். இதற்காக, அடுத்த 5 ஆண்டுகளில் 5 கோடி சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்படும். இந்த 5 கோடி பேரில் பாதி பேர், சிறுபான்மையின சமூகத்தை சேர்ந்த மாணவிகள் ஆவர். கல்வி நிறுவனங்களில் இருந்து படிப்பை பாதியில் நிறுத்திய சிறுபான்மையினர் மாணவர்களுக்கு புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் வாயிலாக மீண்டும் கல்வி போதிக்கப்படும். மேலும், அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.

மதவாதத்தை அகற்றும் வகையில், அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உருவாக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் இலக்கு. வங்கி சேவை, எஸ்எஸ்சி தேர்வு, ரயில்வே தேர்வு, மத்திய மாநில அரசு நடத்தும் தேர்வுகளில் பங்கேற்க விரும்பும் , பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மையின பிரிவை சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள மதரசாவில் பொது பாடதிட்டம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
12-ஜூன்-201915:46:05 IST Report Abuse
Endrum Indian முதலில் சிறுபான்மை என்றால் என்னவென்று வரையரை செய்யுங்கள் . அதுவும் இந்தியர்களுக்கு மட்டும் தான் என்று சொல்லுங்கள் , வெறும் முஸ்லிமாக, கிறித்துவனாக இருக்கும் பட்சத்தில் இல்லை என்று சொல்லுங்கள். 1% க்கும் குறைவான ஜனத்தொகை இந்திய ஜனத்தொகையில் இருந்தால் மட்டுமே அவர்கள் சிறுபான்மை என்று சொல்லவேண்டும் என்று வரையறை செய்யுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
12-ஜூன்-201915:25:09 IST Report Abuse
ஆரூர் ரங் காஷ்மீர் மிசோரம் நாகலாந்து லட்சத்தீவு மேகாலயாவில் இந்துக்கள் மைனாரிட்டி அவர்களுக்கு இந்த சலுகை கிடைக்குமா/
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
12-ஜூன்-201913:58:28 IST Report Abuse
pattikkaattaan இந்திய மக்கள் அனைவருக்கும் சாதி மத வேறுபாடு இன்றி சம உரிமை கொடுங்கள்.. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மட்டும் சிறிது சலுகை கட்டணம் கொடுங்கள் போதும் ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X