அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொதுச்செயலாளர் எடப்பாடி?: போஸ்டரால் பரபரப்பு

Updated : ஜூன் 12, 2019 | Added : ஜூன் 12, 2019 | கருத்துகள் (15)
Advertisement

சென்னை : அதிமுக நிர்வாகிகள், எம்எல்ஏ.,க்கள், எம்.பி.,க்கள் ஆலோசனை கூட்டம் இன்று (ஜூன் 12) நடைபெறும் நிலையில், பொதுச் செயலாளர் எடப்பாடியார் என ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் அதிமுக.,வில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.







அதிமுக.,விற்கு ஒற்றை தலைமை தேவை என வலியுறுத்தி எம்எல்ஏ., ராஜன் செல்லப்பா சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். இதனையடுத்து ஜூன் 12 அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அத்துடன் கட்சியினர் யாரும் பொது வெளியில் கருத்து தெரிவிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

ஒற்றை தலைமை குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது புதிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.






அந்த போஸ்டரில், "பொதுச் செயலாளராக பதவியேற்க வரும் எடப்பாடியாரே வருக" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இது அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓபிஎஸ் ஆதரவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அதிமுக தலைமை அலுவலகம் எதிரில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.




இதேபோல், சிவகங்கை மாவட்டத்தில், அமைச்சர் செங்கோட்டையனை பொது செயலாளராக நியமிக்க வேண்டும் என போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
விவசாயி - Tiruppur,இந்தியா
12-ஜூன்-201915:18:21 IST Report Abuse
விவசாயி ஊழல்திமுக அஇஅதிமுக கட்சிக்காக போஸ்டர் ஒட்டும் நிலையில் கூட நாற்காலி மேல கண்
Rate this:
Share this comment
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
12-ஜூன்-201913:04:47 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam தினகரன் - சசிகலா - ஸ்டாலின் போன்றோரின் கூட்டுச் சதி. விஞ்ஞான ஊழல் எப்போதும் வெற்றி பெறாது.
Rate this:
Share this comment
Cancel
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
12-ஜூன்-201913:02:41 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன் "அணைத்து"??? ஹிந்தி எதிர்ப்பு இருக்கட்டும். முதல்ல தமிழை ஒழுங்காக படிங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X