பொது செய்தி

இந்தியா

வாயு புயல் : 3 லட்சம் பேர் வெளியேற்றம்

Updated : ஜூன் 12, 2019 | Added : ஜூன் 12, 2019 | கருத்துகள் (2)
Advertisement

புதுடில்லி : தீவிர புயலாக மாறி உள்ள வாயு புயலால் குஜராத்தில் இன்று (ஜூன் 12) கனமழை பெய்யும் எனவும், மணிக்கு 150 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் குஜராத் மற்றும் டையூவில் இருந்து 3 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.


வாயு புயலால் மும்பையில் கனமழை பெய்யக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குஜராத் மற்றும் டையூவில் தாழ்வான பகுதிகளில் இருந்து நேற்று(ஜூன் 11) காலை முதல் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 700 புயல் மற்றும் நிவாரண முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


வாயு புயலால் மும்பையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்றாலும், கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. புயலால் காற்றின் வேகமானது மணிக்கு 135 முதல் 150 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் யாரும் கடலோரங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும், கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் எனவும் வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
12-ஜூன்-201912:22:43 IST Report Abuse
A.George Alphonse Oh God please Save and protect my brothers and sisters of Gujarat and Maharashtra from this very dangerous cyclone, tempest and hurricane and also save my country from the loss of lives and properties going to cause by this natural calamity.The God will surely and definitely hear the plea of the people of country and Saves and protects the lives and properties of the people of Gujarat and Maharashtra at present.
Rate this:
Share this comment
Cancel
abhinandan jain - chennai,இந்தியா
12-ஜூன்-201912:18:42 IST Report Abuse
abhinandan jain முன்னதாகவே எச்சரித்துள்ளார்கள் நன்றி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X