பொது செய்தி

தமிழ்நாடு

மீண்டும் அதிமுகவிற்கு தாவிய நடிகர் ராதாரவி

Updated : ஜூன் 12, 2019 | Added : ஜூன் 12, 2019 | கருத்துகள் (20)
Advertisement
Radharavi, ADMK, AIDMK, அதிமுக, ராதாரவி,

சென்னை: அரசியலில் கட்சி மாறுவது சகஜமான ஒன்று. தமிழ் சினிமாவின் மூத்த நடிகராக திகழும் நடிகர் ராதாரவி, திமுக., அதிமுக., என மாறி மாறி பயணித்து வருகிறார். ஆரம்பத்தில் திமுக.,வில் இருந்தவர், பின்னர் அதிமுக., பக்கம் போனார். முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அந்தக் கட்சியிலிருந்து விலகி மீண்டும் திமுக.,வில் இணைந்தார்.

சில மாதங்களுக்கு முன் நயன்தாரா நடித்த, கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய ராதாரவி, நயன்தாராவை தரக்குறைவாக விமர்சித்தார். இது சர்ச்சையானது. இதையடுத்து, ராதாரவி, திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். ராதாரவி மீது நடவடிக்கை எடுத்த திமுக., தலைவர் ஸ்டாலினுக்கு நயன்தாரா நன்றி தெரிவித்திருந்தார். அப்போது முதலே, திமுக.,வின் மீது அதிருப்தியில் இருந்து வந்தார் ராதாரவி. இவர் மீண்டும் அதிமுக.,வில் இணைய இருப்பதாக செய்திகள் பரவின.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, மீண்டும் தன்னை அதிமுக.,வில் இணைத்து கொண்டார் ராதாரவி. அவருடன் அமைச்சர் கடம்பூர் ராஜூவும் உடன் இருந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஜூன்-201920:07:47 IST Report Abuse
ஆப்பு கூத்தாடியால், கூத்தாடிக்களுக்காக, கூத்தாடிகளால் நடத்தப்படும் கட்சி. இதுல அப்பப்போ சிலர் தாவி வந்து தாவி போய் விடுவார்கள். இவிங்க மேல தப்பில்லை. இவங்களுக்கு இட்டுப் போட்டாங்களே அவங்களைச் சொல்லணும்.
Rate this:
Share this comment
Cancel
12-ஜூன்-201919:55:50 IST Report Abuse
குமார் எல்லாம் mp பதவி மோகம்தான்.
Rate this:
Share this comment
Cancel
natarajan s - chennai,இந்தியா
12-ஜூன்-201919:39:16 IST Report Abuse
natarajan s இவர் நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தை சரத்குமார் உடன் சேர்ந்து ஆட்டையை போட்டதை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது, அதிலிருந்து தப்பிக்க ஆளும் கட்சி உதவி தேவை அதனால்தான் நைனா கட்சி மாறிவிட்டார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X