பொது செய்தி

இந்தியா

போர்ப்ஸ் பட்டியலில் கோஹ்லி மட்டும்

Updated : ஜூன் 12, 2019 | Added : ஜூன் 12, 2019 | கருத்துகள் (2)
Advertisement



புதுடில்லி : போர்ப்ஸ் நிறுவனத்தின் உலகில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியர் மற்றும் ஒரே கிரிக்கெட் வீரர்கள் என்ற பெருமையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி பெற்றுள்ளார்.





2019 ம் ஆண்டிற்கான உலகில் அதிக சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் டாப் 100 பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி மட்டுமே. இந்த பட்டியலில் 100 வது இடத்தில் கோஹ்லி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலின்படி, கடந்த ஆண்டில் சம்பளம் மற்றும் விளம்பரங்கள் மூலம் விராத் கோஹ்லி 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதித்துள்ளார். இதில் விளம்பர ஒப்பந்தங்கள் மூலம் மட்டும் 21மில்லியன் டாலர்களையும், சம்பளமாக 4 மில்லியன் டாலர்களையும் பெற்றுள்ளார்.




அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் அர்ஜெண்டினா குத்துச்சண்டை வீரர் பிளோடி மேவெதர் முதல் இடத்தில் உள்ளார். இவர் 127 மில்லியன் டாலர்களை சம்பளம் மற்றும் விளம்பரங்கள் மூலம் பெற்றுள்ளார்.
அதே சமயம் உலகில் அதிகம் சம்பாதிக்கும் தடகள வீரர்கள் பட்டியலில் லயனெல் மெஸ்ஸி முதல் இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே பெண் என்ற பெருமையை டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம் பெற்றுள்ளார். இப்பட்டியலில் இவர், 29.2 மில்லியன் டாலர்களுடன் 63 வது இடத்தில் உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
umarfarook - dindigul,இந்தியா
12-ஜூன்-201913:34:54 IST Report Abuse
umarfarook அது போர்ப்ஸ்
Rate this:
Share this comment
Cancel
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
12-ஜூன்-201913:22:02 IST Report Abuse
Narayan அது போர்ப்ஸ் - போர்ப்ஸ்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X