ராஜ்யசபா துணைதலைவரானார் பியூஷ் கோயல்

Updated : ஜூன் 12, 2019 | Added : ஜூன் 12, 2019 | கருத்துகள் (2)
Advertisement

புதுடில்லி : ராஜ்யசபா துணைத் தலைவராக மத்திய ரயில்வே துறை அமைச்சராக உள்ள பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.





ராஜ்யசபா தலைவராக தவர்சந்த் கெலாட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் துணை தலைவர் பதவிக்கு, மோடி அரசின் நம்பிக்கை வாய்ந்தவராக கருதப்படும் பியூஷ் கோயல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரயில்வே அமைச்சராகவும், வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் உள்ள பியூஷ் கோயல் ராஜ்யசபா துணை தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.




பியூஷ் கோயல் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ராஜ்யசபா உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் பாஜ.,வின் தேசிய பொருளாளராகவும் இருந்தவர். 2 முறை ராஜ்யசபா உறுப்பினராக உள்ள மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ராஜ்யசபா தலைவர் அல்லது துணை தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரவிசங்கர் பிரசாத் தற்போது லோக்சபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளதால், துணைத் தலைவர் வாய்ப்பு பியூஷ் கோயலுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டார். துணை தலைவராக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இதர நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஜூன்-201918:19:03 IST Report Abuse
ஆப்பு ஏராளமாக வேலை வாய்ப்பை உருவாக்கிட்டாரு. மத்திய அரசு பதவிகளுக்கு ஆளே கிடைக்காமல் ஆளுக்கு ரெண்டு பொறுப்புக்கள். இந்த ரேஞ்சுல போனா வேலைக்கு ஆள் தேட சீனா, அமெரிக்காவுலேருந்து ஆள் இறக்குமதி செய்ய வேண்டி வரும்.
Rate this:
Share this comment
Cancel
12-ஜூன்-201914:45:48 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் வாழ்த்துக்கள் பியூஸ் ஜி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X