சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிக் டாக் விபரீதம்: இளம்பெண் உயிரிழப்பு

Updated : ஜூன் 12, 2019 | Added : ஜூன் 12, 2019 | கருத்துகள் (27)
Advertisement
டிக்டாக், இளம்பெண்,

பெரம்பலூர்: டிக் டாக் செயலியில் மூழ்கி கிடந்ததை கணவர் கண்டித்ததால், இளம்பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வங்காரம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி மகள் அனிதா (வயது 24). இவருக்கும் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் சீராநத்தம் கிராமத்தை சேர்ந்த பழனிவேலு என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு மோனிஷா என்ற மகளும், அனீஷ் என்ற மகனும் உள்ளனர். பழனிவேலு, சிங்கப்பூரில் வேலை பார்த்து வருவதால் அனிதா கணவர் ஊரான சீராநத்தத்தில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். தனது மொபைல்போனில், டிக்டாக் செயலியை பதிவிறக்கம் செய்த அனிதா அதிலேயே மூழ்கினார்.

பெரம்பலூர் அருகே குன்னம் பகுதியைச் சேர்ந்த பழனிவேல் என்பவரின் 26 வயது மனைவி அனிதா. கணவர் வெளிநாட்டில் இருந்ததால், 26 வயதான அனிதா, இரண்டு குழந்தைகளை கவனிக்காமல் தொடர்ந்து டிக்டாக் வீடியோவை பதிவேற்றி வந்துள்ளார். விஷயமறிந்த பழனிவேல், அனிதாவை திட்டியதால், விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் சாப்பாடு கொடுக்காமல், டிக்-டாக் வீடியோவில் நடனமாடுவது, பாடல் பாடுவது, மேக்அப் செய்து தன்னை அழகாக காட்டுவது போன்றவைகளை பதிவிட்டு லைக்குகளை அள்ளி வந்துள்ளார்.அவரது செயல்பாடு குறித்து வெளிநாட்டில் இருக்கும் கணவரிடம் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். அவரும் மனைவியை போனில் கண்டித்தார்.






இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த மகள் மோனிஷா கீழே விழுந்து காயம் அடைந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாமல் அனிதா இருந்துள்ளார். தகவல் அறிந்து ஆத்திரமடைந்த கணவர் பழனிவேலு, அனிதாவை போனில் கடுமையாக திட்டியுள்ளார்.
இதனால் மனம் உடைந்த அனிதா தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். அதனை தனது கடைசி விருப்பமாக டிக்-டாக் செயலி மூலம் வீடியோவாக பதிவு செய்தார். வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்த அவர், பின்னர் தண்ணீரை குடித்துள்ளார், இதனை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். மயக்கம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அனிதா நேற்று(ஜூன்11) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivak - Chennai,இந்தியா
17-ஜூன்-201914:00:16 IST Report Abuse
Sivak நாட்டில் ஒரு தலைவலி குறைந்தது ... இந்த மாதிரி பொண்ணுங்க இருந்தாலும் ஒன்னு தான் செத்தாலும் ஒன்னு தான் .. ஆனால் பாவம் குழந்தைகள்
Rate this:
Share this comment
Cancel
Balamurali Srinivasan - Chennai,இந்தியா
13-ஜூன்-201923:55:08 IST Report Abuse
Balamurali Srinivasan டிக் டொக் மேலே பழி போட்டாகி விட்டது. ஆனால் இதற்கு மூல காரணம் கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் இல்லாமல் இருப்பது தான்….குழந்தைகளை நினைத்ததாவுது அந்த கேடு கேட்ட கழுதை ஒழுங்கா இருக்க கூடாத?
Rate this:
Share this comment
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
15-ஜூன்-201910:40:58 IST Report Abuse
கல்யாணராமன் சு.மூல காரணங்கள்ன்னு பார்க்கும்போது அதுவும் ஒரு காரணமாகத்தானே இருந்திருக்கிறது .............. வேலை செய்ய விருப்பப்படாமல், கணவன் சம்பாதித்து அனுப்பும் பணத்தை செலவு செய்து, நேரமென்பது நிறய இருப்பதால் தான் இப்படியெல்லாம் செய்ய தோன்றுகிறது ............ இந்த வாட்சப், முகநூல், ட்விட்டர் போன்றவை மனிதர்களின் சுறுசுறுப்பை அழிக்கும் செயலிகள் .............
Rate this:
Share this comment
Cancel
Subramanian Srinivasan - valrokaiya ,இந்தோனேசியா
13-ஜூன்-201919:22:55 IST Report Abuse
Subramanian Srinivasan இப்படி பட்ட குடும்பத்தை,குழந்தைகளைக்கவனிக்கத்தவர் இருந்து என்ன லாபம்.இல்லாவிட்டாலும் இழப்பில்லை.குழந்தைகள் நிலை பாவமாக இர்ந்தாலம்,இவர் குழந்தைகளைக்கவனிப்பதில்லை,இவரிடமே வளர்ந்தால் அவைகளின் நிலை மோசமாகிவிடும் என்பதால் இனியாவது நல்ல பராமரிப்பில் அவைகள் வளரட்டும்.டிக்ட்டாக தியாகிக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X