நிருபர் மீது சிறுநீர் பெய்த போலீஸ்

Updated : ஜூன் 12, 2019 | Added : ஜூன் 12, 2019 | கருத்துகள் (11)
Advertisement
நிருபர், உ.பி., ரயில்வே போலீஸ்

லக்னோ: ரயில் தடம்புரண்டதை செய்தி சேகரித்த நிருபரை கடுமையாக தாக்கி உதைத்ததுடன், அவர் மீது, சிறுநீர் பெய்த இரண்டு ரயில்வே போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.

உ.பி., மாநிலம் ஷாம்லி என்ற இடத்தில், சரக்கு ரயில் தடம்புரண்டது. இது குறித்து தகவல் அறிந்த அமித் குமார் சர்மா (30) என்ற நிருபர் செய்தி சேகரிக்க சென்றார். அவரை ரயில்வே போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். இதில் இரு தரப்பிற்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, ரயில்வே போலீசார் அமித்குமாரை போலீஸ் ஸ்டேசன் கொண்டு சென்று அடித்து உதைத்தனர்.






இது தொடர்பாக அமித் குமார் கூறுகையில், ரயில் தடம்புரண்ட தகவல் அறிந்து, செய்தி சேகரித்து கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த ரயில்வே போலீசார், என்னை கீழே தள்ளிவிட்டனர். அதில் எனது கேமரா விழுந்து உடைந்தது.
இதற்கு காரணம் கேட்ட போது, போலீசார் கடுமையாக திட்டினர். போலீஸ் ஏட்டு ஒருவர் கடுமையாக தாக்கினார். தொடர்ந்து, 200 மீ., தூரத்தில் உள்ள போலீஸ் ஸ்டேசன் அழைத்து சென்று, சிறையில் அடைத்தனர். அங்கு என்னை துன்புறுத்தியதுடன், என் மீது சிறுநீர் இருந்தனர். காலையில் விடுவித்தனர்.
கடந்த மாதம், அவர்களுக்கு எதிராக செய்தி வெளியிட்டதால், இவ்வாறு நடந்து கொண்டனர். இந்த காட்சிகளை மற்றொரு நிருபர் படம் பிடித்தார். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அமித்குமாரை ரயில்வே போலீசார் பிடித்து சென்றதை அறிந்த மற்ற பத்திரிகையாளர்கள், போலீஸ் ஸ்டேசனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதன் பிறகே அமித்குமாரை போலீசார் விடுவித்தனர். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள ரயில்வே டிஐஜி, சம்பவம் தொடர்பாக 3 ரயில்வே போலீசாரை சஸ்பெண்ட் செய்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
13-ஜூன்-201910:14:43 IST Report Abuse
J.Isaac யாருக்கு வக்கிர புத்தி?
Rate this:
Share this comment
Cancel
V.Rajeswaran - chennai,இந்தியா
12-ஜூன்-201919:44:52 IST Report Abuse
V.Rajeswaran சும்மா தகவல் சேகரிக்க வந்த நிருபரை போலீஸ் ஏன் தாக்க வேண்டும் வேர் எதோ கரணம் இருக்கிறது தடம் புரண்ட ரயிலை பற்றி தகவல் சேகரிக்க வந்த வேறு நிருபர்களை தகாத போலீஸ் இவர்களை மட்டும் என் தாக்க வேண்டும் இந்த சேதியில் ஏதோ மறைக்க படுவதாக தோன்றுகிறது
Rate this:
Share this comment
Cancel
12-ஜூன்-201919:05:52 IST Report Abuse
ஆப்பு ரெண்டு பக்கமும் நியாயம் இருக்க வாய்ப்பில்லைன்னு தோணுது. நிருபர் பரபரப்பாக செய்தி வெளியிட்டு ரேட்டிங்கை அதிகப் படுத்த முயற்சிப்பாரு...போலூசோ தங்கள் கையாலாகாத்தனத்தை மறைக்க நிருபரை அப்புறப்படுத்த முய்ற்சிப்பாங்க. இதுலே யாரு கொஞ்சம் உரக்கப் பேசுறாங்களோ அவங்கதான் மக்களின் அனுதாபத்தைப் பெற வாய்ப்புண்டு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X