கமல்நாத்தை கவிழ்க்க காங்., தலைவர்கள் சதி| Dinamalar

'கமல்நாத்தை கவிழ்க்க காங்., தலைவர்கள் சதி'

Updated : ஜூன் 12, 2019 | Added : ஜூன் 12, 2019 | கருத்துகள் (1)

இந்துார் ; மத்திய பிரதேச மாநிலத்தில் ஆட்சியில் உள்ள காங்., அரசை கவிழ்ப்பதற்கு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களே தன்னை அணுகியதாக, பா.ஜ., தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய் வர்கியா போட்டு உடைத்தார்.








காங்., தலைவர்கள் :


இந்துாரில் இன்று (ஜூன் 12) நடந்த விவசாயிகள் பேரணியில் பேசிய விஜய் வர்கியா, '' திக் விஜய் சிங்கின் பிரதிநிதிகள் மற்றும் ஜோதி ஆதித்ய சிந்தியா, சுரேஷ் பச்சூரியின் பிரதிநிதிகள் என்னை அணுகினர். நீங்கள் மனது வைத்தால் இந்த அரசை கவிழ்க்க முடியும் என்று கூறினர். ஆனால், நான் இந்த ஆட்சியை கவிழ்க்க விரும்பவில்லை என்று கூறினேன்.


ஊழலில் ஊறிய ஆட்சி :


அதற்கு சிந்தியாவின் பிரதிநிதி, கமல்நாத்தை போன்ற ஒரு பொய்யர், ஏமாற்றுக்காரர் ஆட்சியில் நீடிக்ககூடாது. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்கின்றனர். இங்கு ஆளும் கமல்நாத்தின் ஆட்சி ஊழலில் ஊறித் திளைக்கிறது. அவரும் அதை ஆதரித்து வருகிறார். அவருக்கு அவரது மகன் நாகுல்நாத்தின் அரசியல் எதிர்காலம் மட்டுமே குறிக்கோள்.







பணி மாறுதலுக்கு ரூ.50 லட்சம்


கமல்நாத்தின் சிறப்பு அதிகாரிகள் பண எந்திரம் வைத்துள்ளார்கள். ஒரு போலீஸ் உயரதிகாரி 25 லட்சம் ரூபாயை பணி மாறுதலுக்கு தர முன் வந்துள்ளார். அவருக்கு அந்த மாறுதல் கிடைக்கவில்லை. மாறாக, 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு, வேறொரு அதிகாரிக்கு அந்த பணி மாறுதல் ஆணை கிடைத்துள்ளது. அந்த அளவிற்கு ஊழல் தலை விரித்தாடுகிறது,'' என்று சாடினார் வர்க்கியா.

மத்திய பிரதேசத்தில் கடந்த சில மாதங்கள் முன்பு சமீபத்தில் நடந்த சட்ட மன்ற தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை, மொத்தம் உள்ள, 230 தொகுதிகளில், காங்., 114 தொகுதிகளிலும், பா.ஜ., 109 தொகுதிகளிலும், வெற்றி பெற்றது.


கடும் அதிருப்தி ;


பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளின், மூன்று உறுப்பினர்கள், நான்கு சுயேச்சைகள் என, 121 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன்,காங்.,ஆட்சி அமைத்தது; முதல்வராக கமல்நாத் பதவி ஏற்றார். ஆனால், நடந்து முடிந்த லோக்சபா தேர்தல்களில் மொத்தமுள்ள 29 தொகுதிகளில், காங்கிரஸ் ஒன்றில் கூட வெற்றிபெற வில்லை. இதனால், காங்கிரஸ் நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்களே ஆட்சிமீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X