ராகுல் சோனியா இல்லாமல் கூடிய காங்.,உயர்மட்ட குழு | Dinamalar

ராகுல் சோனியா இல்லாமல் கூடிய காங்.,உயர்மட்ட குழு

Updated : ஜூன் 12, 2019 | Added : ஜூன் 12, 2019 | கருத்துகள் (17)

புதுடில்லி ; காங்கிரஸ் தலைவர் ராகுல், சோனியா பங்கேற்காமல், மூத்த காங்கிரஸ் தலைவர் ஏ.கே.அந்தோணி தலைமையில் முக்கிய தலைவர்கள் கூடி 3 மாநில சட்டசபை தேர்தல்கள் குறித்து ஆலோசித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






தேர்தல் ஆலோசனை :


ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல்கள் நடக்க உள்ளது. இந்த சூழ்நிலையில், ராகுல் பங்கேற்காமல் இதர தலைவர்கள் கூடி புதுடில்லியில் தேர்தல்கள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில், சோனியா, பிரியங்காவும் கூட பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் ரேபரேலியில் நடக்கும் லோக்சபா தேர்தல் ஆய்வு கூட்டத்திற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.






சோனியா முடிவு ;


இந்நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜிவாலா கூறுகையில், '' இந்த கூட்டம் முழுக்க சட்டசபை தேர்தல்கள் குறித்தது. எதிர்க்கட்சி தலைவர் குறித்த முடிவை சோனியாவே எடுப்பார்,'' என்று மட்டும் தெரிவித்துள்ளார்.

ஆனால், ராகுலின் ராஜினாமா, லோக்சபாவில் காங்கிரஸ் செயல்பாடு, கட்சியின் எதிர்காலத் தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப் பட்டதாக காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.


பரபரப்பு :


காங்கிரஸ் தலைவர் ராகுல், தனது பதவியை ராஜினாமா செய்து காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் கடிதம் அளித்துள்ள நிலையில், அவர் இல்லாமல், முக்கியத் தலைவர்கள் கூடிப்பேசியது, புதுடில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X