பொது செய்தி

இந்தியா

ஊழல் செய்யாதே: மோடி உத்தரவு

Updated : ஜூன் 12, 2019 | Added : ஜூன் 12, 2019 | கருத்துகள் (21)
Advertisement

புதுடில்லி: ஊழல் நடப்பதைத் தடுப்பதற்காக, 5 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அதிகாரியை தனி செயலாளராக வைத்துக்கொள்ள வேண்டாம் என்று மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
தனது 2வது ஆட்சிக் காலம் ஊழல் அற்றதாக, எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாததாக இருக்க வேண்டும் என்று மோடி விரும்புகிறார்.





சில அமைச்சர்கள், சென்ற முறை தங்களுக்கு தனி செயலராக இருந்தவர்களையே மீண்டும் செயலராக தொடர விருப்பம் தெரிவித்தனர். இதை மோடி நிராகரித்துவிட்டார்.
வேறு சில அமைச்சர்களுக்கான தனி செயலர்களுக்கு சில நாட்களுக்கு முன் மோடி ஒப்புதல் அளித்தார். இவர்கள் தவிர, 10 ஆண்டுகளுக்கு மேல் அவரவர் துறை அலுவலகங்களில் வேலை செய்து வருவோரையும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பிரதமரின் தனிப்பட்ட உதவியாளர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.




நிர்வாகம் சிறப்பாக நடக்க வேண்டும் என்பதற்காக வெளியில் இருந்தும் திறமையானவர்களை பணிக்கு அமர்த்த மோடி நினைக்கிறார். பல்வேறு பதவிகளில் 40 சதவீதம் வெளி ஆட்களை நியமிக்கலாம் என்பது மோடியின் எண்ணம்.
தனியார் துறைகளில் இருந்து சுமார் 400 பேரை தேர்வு செய்ய திட்டம் தயாரிக்குமாறு அதிகாரிகளை, பணியாளர் துறை செயலர் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.2020ம் ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.




இப்படி மத்திய அரசு பணியில் சேரும் 10 பேருக்கு நியமன உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. அடுத்து 55 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதை நிதி ஆயோக் செயல்படுத்தும்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
13-ஜூன்-201910:11:47 IST Report Abuse
J.Isaac சந்தர்ப்பம் கொடுக்கப்படும்
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
13-ஜூன்-201910:08:30 IST Report Abuse
J.Isaac ஊழல் நடப்பதற்கு காரணமானவர்களே சட்டமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கவுன்சிலர்களும் தானே. பாராளுமன்றத்திற்கு 43 % குற்ற பிண்னனி உள்ளவர்கள் தேர்த்தெடுக்கப்ட்டுள்ளார்களே.
Rate this:
Share this comment
Cancel
venkatan - Puducherry,இந்தியா
12-ஜூன்-201921:14:24 IST Report Abuse
venkatan முதலில் மந்திரிகளும்,எம் பி க்களும் கை சுத்தம் உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகும். பின்னரே தங்கள் அதிகாரிகளை தெரிவு செய்ய கட்டளை இட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X