மோதலில் மே.வங்கம்: கவர்னர் முக்கிய முடிவு

Updated : ஜூன் 12, 2019 | Added : ஜூன் 12, 2019 | கருத்துகள் (10)
Advertisement

கோல்கத்தா : பா.ஜ., - திரிணாமுல் காங்., இடையேயான தொடர் மோதல் காரணமாக மேற்குவங்கம் கலவர பூமியாக மாறி உள்ளது.

லோக்சபா தேர்தலுக்கு முன்பே பா.ஜ., - திரிணாமுல் இடையே துவங்கிய மோதல் இதுவரை ஓயவில்லை. இருகட்சி தொண்டர்களும் மாறி மாறி கொல்வது தொடர் கதையாகி வருகிறது. இரு கட்சி தொண்டர்களின் அரசியல் மோதல் காரணமாக இதுவரை 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பா.ஜ., சார்பில் 8 பேரும், திரிணாமுல் சார்பில் 7 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேற்குவங்க அரசை எதிர்த்து 2 நாட்களுக்கு முன் 12 மணி நேர பந்த்திற்கு பா.ஜ., அழைப்பு விடுத்தது. இதன் தொடர்ச்சியாக இன்று (ஜூன் 12) போராட்ட பேரணி நடத்தியது.
ஆனால் பா.ஜ., பேரணியில் கலந்து கொண்ட தொண்டர்கள் மீது தண்ணீர் பீச்சியும், கண்ணீர் புகை வீசியும் போலீசார் தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். போலீசாரை கண்டித்து தடுப்புக்களை தள்ளி விட்டு, பா.ஜ.,வினர் தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர். போலீசார் - பா.ஜ., இடையேயான இந்த மோதலால் கோல்கத்தா நகரம் முழுவதும் பதற்றம் காணப்படுகிறது.
இருக்கட்சிகள் இடையேயான தொடர் மோதலை அடுத்து அனைத்து கட்சி கூட்டத்திற்கு மேற்குவங்க கவர்னர் கேசரிநாத் திரிபாதி அழைப்பு விடுத்துள்ளார். மேற்குவங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த கவர்னரிடம் பா.ஜ., கோரிக்கை வைத்துள்ளது.
கூட்டத்திற்கு பா.ஜ., திரிணாமுல் காங்., இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் திரிணாமுல் காங் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு பின் கவர்னர் முக்கிய முடிவு எடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bharatha Nesan - Chennai,இந்தியா
12-ஜூன்-201920:42:26 IST Report Abuse
Bharatha Nesan பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த முஸ்லிம்கள், அவர்கள் இந்தியாவில் ஊடுருவ மம்தா பானர்ஜி எனப்படும் மமைதாபேகம் என்ற முஸ்லிம் பெண் உதவிசெய்து ரேஷன் கார்ட் ஓட்டுரிமை அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் முதலான அனைத்தையும் மம்தா உண்டாக்கி கொடுக்கிறார், அதன் மூலம் அவர்கள் பணிபுரிய தடைசெய்திருக்கும் நாடுகளுக்கும் இந்திய பாஸ்போர்ட்டில் செல்கிறார்கள், உண்மையான இந்தியனுக்கு கிடைக்கவேண்டிய பணிகள் வாய்ப்பு போலி இந்தியர்களுக்கு போகிறது. பங்களாதேசில் வாழும் பெரும்பான்மை முஸ்லிம்கள் அங்குள்ள சிறுபான்மை இந்து மக்களின் வீடுகள் மற்றும் வழிப்பாட்டு தளங்களை அழிக்கும் செயலில் தீவிரவாதிகள். அவர்கள் இந்தியாவின் பிறமாநிலங்களிலும் ஊடுருவியிருக்கிறார்கள், எந்தமாநிலம் என்று கேட்டால் இந்தியாவின் வெஸ்ட் பெங்கால் கல்கத்தா எனக் கூறுவார்கள். வங்கதேச முஸ்லிம்கள் (பங்களாதேஷ் முஸ்லிம்கள் ) செய்யும் தொழில் எவையாகினும் அவை 3 ஆம் தரத்திலிருக்கும். வங்கதேச இந்து மக்கள் உயர்வான எண்ணம் கொண்ட மிகவும் நல்லவர்கள் பண்புள்ளவர்கள். மம்தா பானர்ஜி எனும் முஸ்லிம் பெண்ணின் மனம் வெஸ்ட் பெங்காலை முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாநிலமாக்கி பின்னாளில் தனிநாடு ஆக்குவதே ஆகும். மேற்குவங்க காவல் துறை தன் கட்டுப்பாட்டில் இருந்தமையால் அவர்களை ஏவிவிட்டு 54 தேசபக்தர்களை கொன்றொழித்ததற்கு தக்க தண்டனை கிடைக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
12-ஜூன்-201919:29:54 IST Report Abuse
nanthuji,thailand ॐ.. மாநிலத்தின் முதல்வர், மக்களின் முன்னேற்றம், ஒருங்கிணைந்த வளர்ச்சி, அமைதியின் வழி நடக்க வேண்டும்.. ஊழல் கும்பலுக்கு குடை பிடித்தும், லஞ்சபேய்களுக்கு அடைக்கலம் தந்தும், தன் அடங்கா பிடாரிதனத்தை காட்டியும் பயனில்லை.. பாரத திருநாட்டின் முழுக்கட்டுப்பாடும், கலியுக புருஷர் வசம் வந்து வெகு காலமாகி விட்டது.. உமது வித்தைகளைக் காண்பதற்கு, இது கான் கிராஸ் ஆட்சியில்லை, அறிவுள்ள பிள்ளைனா பிழைக்கும், இல்லையேல், 🔆தீதிக்கு திகார் தான்..
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
12-ஜூன்-201917:56:22 IST Report Abuse
J.Isaac ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு தொக்கு மே.வ. ஜனாதிபதி ஆட்சிக்கு தயாராகிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X