பாக்., வான்வெளி: தவிர்க்கிறார் மோடி| Dinamalar

பாக்., வான்வெளி: தவிர்க்கிறார் மோடி

Updated : ஜூன் 12, 2019 | Added : ஜூன் 12, 2019 | கருத்துகள் (16)

புதுடில்லி : பிரதமர் நரந்திரமோடி கிர்கிஸ்தான் செல்ல பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த மாட்டார் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.






வரும், ஜூன் 13 மற்றும் 14ம் தேதிகளில், கிர்கிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கிறார். அதற்கு பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்தினால், விரைவில் செல்ல முடியும். ஆனால், கடந்த பிப்ரவரி மாதம் 26-ல் பாலக்கோட்டில் ஜெய்ஷ் இ முகமது முகாம் மீதான இந்திய விமானப் படைத் தாக்குதலை அடுத்து தனது வான்வழிகளை பாகிஸ்தான் மூடியது.





எனினும், பிரதமர் மோடி கிர்கிஸ்தான் செல்ல பாக்., வான்வெளியில் விமானம் பறக்க அந்நாட்டு அரசிடம் இந்திய வெளியுறவுத்துறை அனுமதி கேட்டது. அந்நாடு சார்பில், அனுமதி தருவதாகவும், இந்தியா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கோரியதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இன்று (ஜூன் 12 ) செய்தியாளர்களிடம் இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார், கூறுகையில், ''பிரதமர் மோடி கிர்கிஸ்தான் செல்ல பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்தப் போவதில்லை. மாறாக, ஓமன், ஈரான் மற்றும் மத்திய ஆசிய நாடுகள் வழியாக செல்வார்,'' என்று தெரிவித்தார்.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X