அரசியல் செய்தி

தமிழ்நாடு

கவர்னருடன் இபிஎஸ் - ஓபிஎஸ் திடீர் சந்திப்பு

Updated : ஜூன் 12, 2019 | Added : ஜூன் 12, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement

சென்னை : கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திடீரென சந்தித்துள்ளனர்.



latest tamil news


பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை கவர்னர் பன்வாரிலால் சமீபத்தில் சந்தித்து விட்டு வந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.
அதிமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை நடந்து முடிந்துள்ள நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் திடீரென கவர்னரை சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்திய உள்ளது. இந்த சந்திப்பின் போது புதிய டிஜிபி நியமனம், புதிய தலைமை செயலாளர் நியமனம், ராஜிவ் கொலையாளிகள் 7 பேரின் விடுதலை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


latest tamil news


விரைவில் நடக்க உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பாகவும் முதல்வர் பழனிசாமி, கவர்னரை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. கவர்னர் - முதல்வர் சந்திப்புக்கு பிறகு முக்கிய முடிவுகள் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.


சந்திப்பு நிறைவு

இந்நிலையில் ராஜ்பவனில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துடன், முதல்வர் பழனிசாமியின் சந்திப்பு நிறைவு பெற்றது. சுமார் ஒரு மணி நேரம் நடந்த இச்சந்திப்பின் போது நிதி ஆயோக் கூட்டதத்தில் பங்கேற்பது குறித்து கவனர்னருடன் முதல்வர் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
13-ஜூன்-201906:17:45 IST Report Abuse
Matt P உள்துறை அமைச்சரஐ சந்தித்திருக்கிறாரே ...மாநில அரசை ஆட்டம் காண வைக்க முயற்சிக்கிறாரோ ,,,என்ற பயம் வந்திருக்கலாம் ..
Rate this:
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
12-ஜூன்-201921:07:27 IST Report Abuse
PANDA PANDI சூப்பர் மாமு.டீல் டீல். உங்க குடும்ப பிரச்சனையா டீல் பண்றமாரி இருக்கு. WHAT A SHAME
Rate this:
Cancel
oce - tokyo,ஜப்பான்
12-ஜூன்-201918:51:55 IST Report Abuse
oce எவரோ செய்ய போய் இவர்கள் மாட்டி இருப்பார்கள். செயல் பாட்டின் பின்னணி பேச்சை அப்பாவி தனமாக நம்பி இருக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X