விரைவில் பா.ஜ.,விற்கு புதிய தலைவர்

Updated : ஜூன் 12, 2019 | Added : ஜூன் 12, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி : பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சராக்கப்பட்டுள்ளதால் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்காக பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம் டில்லியில் நாளை (ஜூன் 13) நடைபெற உள்ளது.



latest tamil news


தற்போதைய தலைவர் அமித்ஷா தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் அனைத்து மாநில பா.ஜ., தலைவர்கள், மாநில பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தின் போது கட்சி நிர்வாகிகள் சேர்ந்து புதிய தலைவரை தேர்வு செய்வார்கள் என கூறப்படுகிறது.
அமித்ஷா, கடந்த 3 ஆண்டுகளாக பா.ஜ., தலைவராக இருந்து வருகிறார். அவரின் பதவிக்காலம் இந்த ஆண்டு துவக்கத்தில் முடிவடைந்தது. இருப்பினும் லோக்சபா தேர்தல் காரணமாக தேர்தல் முடியும் வரை அவரே தலைவராக இருக்கும்படி கேட்கப்பட்டது. தற்போது தேர்தல் முடிந்து விட்டதால் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


latest tamil news


தலைவர் பதவிக்கான தேர்தல் தவிர, உ.பி., மற்றும் பீகார் மாநிலங்களுக்கு புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. பா.ஜ., பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பதவிக்கு ஜூன் 18 ல் தேர்தல் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
13-ஜூன்-201907:39:37 IST Report Abuse
sundarsvpr பி ஜெ பி மதவாத கட்சியா என்பது முக்கியம் இல்லை. ஒருவருக்கு ஓரு பதவி என்ற கோட்பாட்டில் மலரும் ஒரு ஜனநாயக கட்சி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X