உ.பி., பார் கவுன்சில் தலைவர் சுட்டுக்கொலை| Dinamalar

உ.பி., பார் கவுன்சில் தலைவர் சுட்டுக்கொலை

Updated : ஜூன் 12, 2019 | Added : ஜூன் 12, 2019
Share

லக்னோ ; உத்தர பிரதேச மாநிலத்தில், முதல் பெண் பார்கவுன்சில் தலைவராக கடந்த 2 நாட்கள் முன்னர் தேர்வு செய்யப்பட்டவ தர்வேஷ் யாதவ் சுட்டுக் ல்லப்பட்டுள்ளார்.



latest tamil news



கடந்த 2 நாட்கள் முன்பு உ.பி.,மாநில பார் கவுன்சிலுக்கு தேர்தல் நடந்தது. இதில், தர்வேஷ் யாதவ் என்ற பெண் வழக்கறிஞர், முதன்முதலாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்தநிலையில், அவர் இன்று ஆக்ரா நீதிமன்றத்தில் மர்மநபர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது நாடு முழுவதும் நீதித்துறை வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


latest tamil news


சம்பவம் குறித்து, உ.பி., போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், தர்வேஷ் யாதவின் உதவியாளர் மணீஷ் சர்மா தான் கொலையாளி என்றும், அவர் 3 குண்டுகளை பயன்படுத்தி இருப்பதாகவும், போலீஸ் அதிகாரி அஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

மேலும், காயமடைந்த நிலையில் இருந்த மணீஷ்சர்மாவுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், சம்பவத்திற்கான காரணம் குறித்து தொடர் விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும் என்றும் கூறியுள்ளார்.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X