பொது செய்தி

இந்தியா

காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி 6 மாதம் நீட்டிப்பு

Updated : ஜூன் 12, 2019 | Added : ஜூன் 12, 2019 | கருத்துகள் (8)
Advertisement

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி மேலும் 6 மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


ஜம்மு - காஷ்மீரில், மெஹபூபா முப்தி தலைமையிலான, ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை, கடந்த 2018, ஜூன், 20ம் தேதி, பா.ஜ., வாபஸ் பெற்றது. இதையடுத்து, அங்கு, கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. கவர்னர் ஆட்சி அமைந்து, ஆறு மாதங்கள் நிறைவடைந்த நிலையில், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கான பரிந்துரையை, ஜம்மு - காஷ்மீர் மாநில கவர்னர் சத்யபால் மாலிக் அனுப்பினார். இதில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கையெழுத்திட, டிச.,19ல் காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது.

காஷ்மீரில் சட்டசபை தேர்தல் எப்போது நடக்கும் என எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், 2019 இறுதியில் தேர்தல் நடத்தப்படும் எனவும், அமர்நாத் யாத்திரை முடிந்த பிறகு தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் தேர்தல் கமிஷன் சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில், ஜனாதிபதி ஆட்சியை மேலும் 6 மாத காலத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநில கவர்னரின் பரிந்துரையின்படி மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
13-ஜூன்-201910:45:05 IST Report Abuse
Chowkidar NandaIndia மகிழ்ச்சி. நல்லதொரு நடவடிக்கை.
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
13-ஜூன்-201908:25:12 IST Report Abuse
RajanRajan GOOD. CLEAN KASHMIR AND PROTECT THE STATE FROM TERRORISM.
Rate this:
Share this comment
Cancel
tamizha tamizha - Bellevue,யூ.எஸ்.ஏ
13-ஜூன்-201903:49:55 IST Report Abuse
tamizha tamizha இதற்க்கு பெயர்தான் ஜனநாயக படுகொலை.. தேர்தல் நடத்தாமல் மக்களின் விருப்பம் இல்லாமல் மக்களின் மீது திணிக்கப்படும் பிஜேபி.
Rate this:
Share this comment
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
13-ஜூன்-201909:05:00 IST Report Abuse
ஆரூர் ரங்அந்த மூர்க்கரூகளுக்கு ஜனநாயகம் ஒத்துவருமா? அவர்களது நாடுகளில் நேர்மையான தேர்தலோ ஜனநாயகமா உண்டா? தாலிபான்கொள்கைப்படி ஜனநாயகம் அவர்களது மார்க்கத்துக்கு ஒத்துவராது ஜனநாயக்கமென்பதே வெள்ளையர்கள் புகுத்திய வேண்டாத விஷயம் என்கிறார்கள் மொகலாயர் ஆட்சியில் ஜனநாயக முறைப்படியா ஆட்சி நடந்தது? விரட்டப்பட்ட இந்துக்கள் மறுகுடியேற்றம் செய்யப்பட்டு தொகுதி மறுவரையரை செய்யப்பட்டு சிறுபான்மையினரும் முதல்வராகும் நிலை வரும்வரை தேர்தல் தேவையில்லை...
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
13-ஜூன்-201909:58:35 IST Report Abuse
Chowkidar NandaIndiaஎன்னது ஜனநாயக படுகொலையா? ஜனநாயகத்தை பற்றியெல்லாம் கான்க்ராஸ் கட்சி பேசலாமா? ராமகிருஷ்ணா ஹெக்டே கர்நாடக முதல்வராக இருந்தபோது கான்க்ராஸ் எப்படி நடந்து கொண்டது? குஜராத் முதல்வராக மோடிஜி இருந்தபோது அவருக்கு கொடுத்த தொல்லைகள் தான் எத்தனை எத்தனை? ஆந்திராவில் NTR ஆட்சியை கலைக்க முயன்று அசிங்கப்பட்டது, 1992 இல் பாஜக ஆளும் அத்தனை மாநிலங்களின் ஆட்சியை கவிழ்த்தது, வருடாவருடம் பாராளுமன்ற தேர்தல் நடத்தியது, பாராளுமன்றத்தில் அமளி துமளி செய்து தனிதெலுங்கானா பிரகடனம் செய்தது இப்படி கான்க்ராஸ்ஸின் ஜனநாயக படுகொலைகளை சொல்லிக்கொண்டே போகலாமே. இவ்வளவு ஏன்? தமிழகத்தில் கருணாவின் ஆட்சியை எத்தனை முறை கவிழ்த்திருக்கும் உங்கள் கான்க்ராஸ்? தேவகவுடா, குஜ்ரால், சிபுசோரன், கருணா என்று கான்க்ராஸ்ஸின் ஜனநாயக படுகொலைகளால் பாதிக்கப்பட்டோர் ஏராளம் அல்லவா. மொத்தத்தில் டுமிழன் என்பதை நிரூபித்துவிட்டீர்....
Rate this:
Share this comment
tamizha tamizha - Bellevue,யூ.எஸ்.ஏ
14-ஜூன்-201901:12:21 IST Report Abuse
tamizha tamizhaஇப்பொது என்ன சொல்லகிறீர்கள்.. காங்கிரஸ் செய்ததை நாங்களும் செய்வோம் ... அதுதானே.. மக்களால் தேர்தெடுக்கப்படும் அரசு இருந்தால் மட்டுமே.. அங்கு செய்ய வேண்டியதை செய்ய முடியும். அதேபோல் மக்கள் தங்களுக்கு என்ன வேண்டுமோ அதை மக்களின் பிரதிநிதிகள் பெற்று தர முடியும்.. இப்படி ஆண்டு கணக்கில் ஜனாதிபதி ஆட்சி நடந்து கொண்டிருந்தால் மக்களால் தங்களின் அடிப்படை உரிமைகளை எப்படி கேட்டு பெற முடியும்... தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாதலால் மக்கள் படும் துயரங்கள் சொல்லி மாளாது.. சிறிய நகர்ப்புறங்களை யாரிடம் சென்று கேட்பது என்று தெரியாமல் மக்கள் அல்லாடுகின்றனர்...மற்றும் நான் காங்கிரஸ் காரன் அல்ல....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X