பொது செய்தி

இந்தியா

'ஹைபர் சோனிக்' விமானம்: இந்தியா சாதனை

Updated : ஜூன் 12, 2019 | Added : ஜூன் 12, 2019 | கருத்துகள் (13)
Share
Advertisement

புவனேஸ்வர் : இந்தியா முதல் முறையாக ஒலியை மிஞ்சும் வேகத்தில் செல்லும் ஆளில்லா ஹைபர் சோனிக் விமானத்தை வெற்றிகரமாக இயக்கி சாதனை செய்துள்ளது.



latest tamil news




உள்நாட்டு தொழில்நுட்பம் :


ஒடிசா மாநிலத்தில் உள்ள அப்துல்கலாம் தீவில் நடைபெற்ற இந்த சோதனையில் முற்றிலும் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஆளில்லா விமானம் இயக்கி வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. 20 நிமிடங்கள் மட்டுமே பறக்க விடப்பட்ட அந்த விமானம் மணிக்கு 6 ஆயிரத்தி 174 கிலோ மீட்டர் வேகத்தில், ஹைப்பர் சோனிக் என்ற ஒலியை மிஞ்சும் வேகத்தில் பறந்தது.


latest tamil news



இதன் மூலம் ஹைப்பர்சோனிக் வேகத்தில் செல்லும் விமானத்தை இயக்கும் இந்திய தொழில் நுட்பம் முழு வெற்றியை எட்டி உள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.


ஒலியை மிஞ்சும் ஏவுகணை ;

எதிர்காலத்தில் ஒலியை மிஞ்சும் வேகத்தில் செல்லும் ஏவுகணைகளை உருவாக்கவும், பயணிகள் போக்குவரத்தை வேகப்படுத்தவும் இந்த தொழில் நுட்பம் பயன்படுத்தப்படும் என்று பாதுகாப்புத்துறை கூறியுள்ளது.


பட்நாயக் வாழ்த்து:


இதுகுறித்து டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள ஒடிசா முதல்வர் பட்னாயக், இது ராணுவத்தின் வலிமையை அதிகரித்துள்ளது என கூறியுள்ளார்.



Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - Coimbatore,இந்தியா
13-ஜூன்-201922:18:36 IST Report Abuse
Rajan ஜெய் ஹிந்த் நம் பாரதத்தின் வலிமையையும் நமது ஆராச்சியாளர்களின் அறிவு கூர்மையும் படம் பிடித்து உலகுக்கு நிரூபித்துள்ளது. நமது பாரத பிரதமரின் ஆட்சியில் இன்னும் இது போல் பல நிகழ்வுகள் நிகழும்.
Rate this:
Cancel
TamilArasan - Nellai,இந்தியா
13-ஜூன்-201911:42:44 IST Report Abuse
TamilArasan நவீன் பட்நாயக் வாழ்த்து தெரிவிக்கிறார் - நம் ஊர்ல என்னவென்றால் இது போன்ற ஒரு ஆராட்சி கூடத்தையே தமிழகத்தில் திறக்க அனுமதித்து இருக்கமாட்டார்கள் நம் ஊர் அரசியல் வியாதிகள்.... உதாரணம் தேனியில் அமையவிருக்கும் நியூட்ரினோ ஆராட்சி கூடம் - உலகிலே சுற்றுசூழலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஸ்விஸ் நாட்டில் தான் உலகின் முதல் மற்றும் மிக பெரிய நியூட்ரினோ ஆராட்சி கூடமான செர்ன் இருக்கிறது - இது ஆல்ப்ஸ் மலை தொடரை குடைந்து அமைத்துள்ளார்கள் மேலும் நம் ஊரில் அமையவிருக்கும் ஆராட்சி கூடத்தை விட பலமடங்கு பெரிது... நம் ஊரில் உள்ள அரசியல் வியாதிகள் கூறுவதை நம்பி பொதுமக்களும் என்னவென்றே தெரியாமல் பல நல்ல திட்டங்களை எதிர்க்கிறார்கள் என்பதுதான் சோகம்...
Rate this:
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
13-ஜூன்-201910:55:04 IST Report Abuse
Cheran Perumal நல்ல வேளை, தமிழ்நாட்டிலிருந்து சோதனை செய்யவில்லை. ஒலியை விஞ்சும் வேகத்தில் விமானம் பறந்தால், இங்கு தமிழர்களுடைய ஒலி பாதிக்கப்படும், அதனால் அனுமதிக்க மாட்டோம் என்று ஸ்டாலின் உடனே அறிக்கை விடுவார், மற்ற சில்லறைகள் அதை ஏற்று போராட கிளம்பிவிடுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X