சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவை நபருக்கு இலங்கை குண்டு வெடிப்புடன் தொடர்பு: என்.ஐ.ஏ.,

Updated : ஜூன் 12, 2019 | Added : ஜூன் 12, 2019 | கருத்துகள் (7)
Advertisement

கோவை: கோவையில் என்.ஐ.ஏ., நடத்திய சோதனையில், இலங்கை குண்டுவெடிப்புடன் ஒருவருக்கு தொடர்புள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.






தமிழ்நாடு, கேரளாவில் பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டுருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், தேசிய புலனாய்வு அமைப்பு(என்.ஐ.ஏ.,) கோவையில் சோதனை நடத்தியது. உக்கடம், குனியமுத்தூர், போத்தனூர், சுண்ணாம்பு கால்வாய் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 7 பேரின் வீடுகளில் நடந்த சோதனையில், 300 ஏர் கன்கள், 14 மொபைல்கள், 29 சிம் கார்டுகள், 10 பென் டிரைவ்கள், 3 லேப்டாப், 6 மெமரி கார்டு, 4 ஹார்டு டிஸ்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.





மேலும், விசாரணையில் இலங்கை குண்டு வெடிப்புடன் ஒருவருக்கு தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது அசாருதீன், இலங்கை குண்டு வெடிப்பை நடத்திய ஸக்ரான் ஹசீனுடன் தொடர்பில் இருந்துள்ளார் என என்.ஐ.ஏ., தெரிவித்துள்ளது. மேலும் சமூக வலைதளம் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 6 பேரிடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
13-ஜூன்-201912:39:51 IST Report Abuse
DSM .S/o PLM இந்த மாதிரி கயவர்களை அடையாளம் காட்டாமல் மறைப்பதில் மீடியாக்களுக்கு பெரும்பங்கு உள்ளது. இவர்கள் கைது செய்ய பட்டவுடன் தமிழக இளைஞர்கள் என்று தான் திரும்ப திரும்ப செய்திகள் வாசிக்க பட்டன. பெயர்களை கூட தலைப்பு செய்தியில் சொல்லவில்லை ..தமிழ இளைஞர்கள் என்று தான் திரும்ப திரும்ப சொல்ல பட்டது . இஸ்லாமிய தீவிரவாத இளைஞர்கள் என்று சொல்லவில்லை.. ஏன் ? இந்த செய்தியை சொல்லிவிட்டு அடுத்து ஒரு செய்தி சொல்லப்பட்டது..அதில் சென்னையில் ஒரு காண்ட்ராக்டர் தனது மனைவியின் தங்கையை சீரழித்து விட்டாராம். அந்த செய்தியை சொல்லும்போது "அய்யப்பன் தனது மனைவியின் தங்கையை கற்பழித்தார், அய்யப்பன் அந்த பெண்ணை மருத்துவமனையில் விட்டுவிட்டு ஓடிவிட்டார், அய்யப்பன் போக்ஸோ சட்டத்தில் கைது செய்ய பட்டார்". இப்படி பத்து முறையாவது அய்யப்பன் என்ற பெயரை உச்சரித்தது அந்த செய்தி. பார்ப்பவர்கள் ஏதோ அந்த அய்யப்பன் வந்து தவறு செய்து விட்டாரோ என்று என்னுமளவு.. மிகைப்படுத்தல் .. எதற்கு இப்படி ஒருமதத்தை குறிவைத்து தாக்குவதும், மாற்று மதக்குற்றவாளிகளை தமிழர் என்று அறிமுக படுத்தி அம்மதங்களை காப்பாற்றுவதும் ..? பணம் பாதாளம் வரை பாய்கிறது.. மீடியாக்களை அதைவிடவும் ஆழமாக ஊடுருவியுள்ளது.
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
13-ஜூன்-201906:56:23 IST Report Abuse
வல்வில் ஓரி ஏண் இவளோ வெறி?
Rate this:
Share this comment
Cancel
magan - london,யுனைடெட் கிங்டம்
13-ஜூன்-201902:05:54 IST Report Abuse
magan இவர்களை இலங்கை பாணியில் தான் தண்டிக்க வேண்டும் அந்த மக்கள் இந்த அமைதி மூர்க்கத்துக்கு சரியான தண்டனை கொடுத்துள்ளார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X