கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஹெல்மெட் அபராத கட்டணத்தை உயர்த்த ஐகோர்ட் உத்தரவு

Updated : ஜூன் 12, 2019 | Added : ஜூன் 12, 2019 | கருத்துகள் (7)
Advertisement

சென்னை: ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவருக்கு விதிக்கப்படும் அபராதத்தை ஒரு வாரத்தில் அதிகரிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.






'இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்வோரும் பின் இருக்கையில் அமர்வோரும் ஹெல்மெட் அணிய வேண்டும்' என சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு வந்தவுடன் போக்குவரத்து போலீசாரும் அப்பிரிவு அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்தனர். 'ஹெல்மெட்'டின் அவசியம் குறித்து 'சிக்னல்' தோறும் விழிப்புணர்வு பிரசாரமும் செய்தனர். இதையடுத்து ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களை பிடித்து அபராதம் வசூலித்தனர். இதெல்லாமே சில நாட்கள் மட்டுமே நீடித்தன.

இந்நிலையில் சென்னையை சேர்ந்த ராஜேந்திரன் 'இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர். சட்ட விதிகளை கண்டிப்புடன் பின்பற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்' என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹெல்மெட் விவகாரத்தில் மீண்டும் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தனர். 'ஹெல்மெட் அணியாமல் செல்வோரின் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்' என்றனர்.






அபராதம் அதிகரிப்பு:


இந்நிலையில், ஹெல்மெட் தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவருக்கு விதிக்கப்படும் அபராதத்தை ஒரு வாரத்தில் அதிகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. அபராதத்தை அதிகரிக்க பிறப்பித்த அரசாணையை ஒரு வாரத்தில் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் விதிமீறினால் அபராதம் விதிக்கும் அதிகாரம், போக்குவரத்து உள்பட அனைத்து சப் இன்ஸ்பெக்டர்களுக்கும் வழங்க வேண்டும் எனவும் ஐகோர்ட் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
12-ஜூன்-201923:43:48 IST Report Abuse
Allah Daniel இதற்கு பதில்..அரசே 3 மடுங்கு விலையில் ஹெல்மெட் விற்கலாம்..
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
13-ஜூன்-201906:48:45 IST Report Abuse
Sanny அமெரிக்காவில் வாகன விதிமுறை, இரண்டாம் முறை மீறினால் டபுள் மடங்கு தண்டனை என்று தெரியாதா? ஒரு உயிரை காப்பாற்ற எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம் நண்பரே....
Rate this:
Share this comment
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
12-ஜூன்-201923:38:18 IST Report Abuse
Gnanam ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தால் போதும்.
Rate this:
Share this comment
Cancel
thiru - Chennai,இந்தியா
12-ஜூன்-201923:26:23 IST Report Abuse
thiru ஹெல்மெட் அணியாததற்கு அபராதமாக ஒரு ஹெல்மெட் விற்று விட வேண்டும்.. இப்படி ஒவ்வொரு முறையும் செய்தால் எல்லோரும் ஹெல்மெட் தன்னை தானே வழிக்கு வந்து விடுவர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X