பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜூன் 12, 2019
Advertisement
 இதே நாளில் அன்று

ஜூன் 13, 1988
க.வெள்ளை வாரணனார்:தஞ்சை மாவட்டம்,கும்பகோணம் அருகிலுள்ள, திருநாகேஸ்வரத்தில், 1917 ஜன., 14ல் பிறந்தவர்,வெள்ளை வாரணனார். திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் தேவாரப் பாடசாலையில், திருமுறைகளை இசையோடு கற்று, தேர்ச்சி பெற்றார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில், வித்துவான் தேர்வில், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1938ல், தஞ்சாவூர் கரந்தை தமிழ்க் கல்லுாரியில் விரிவுரையாளராகப்பணிபுரிந்தார்.

'தொல்காப்பியம், நன்னுால் எழுத்ததிகாரம்' உள்ளிட்ட இலக்கண நுால்கள், 'பன்னிரு திருமுறை வரலாறு, தில்லைப் பெருங்கோவில் வரலாறு' உள்ளிட்ட, சைவ சமயம் சார்ந்த நுால்கள், சங்க இலக்கியம், உரை என, ஏராளமான நுால்கள் எழுதியுள்ளார். 'சித்தாந்தச் செம்மல், திருமுறை உரைமணி, செந்தமிழ்ச் சான்றோர், தமிழ் மாமணி' உள்ளிட்ட, பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். 1988 ஜூன், 13ல் காலமானார்.

தமிழறிஞர், வெள்ளை வாரணனார் இறந்த தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X