சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பு அகற்ற சென்ற அதிகாரியிடம் தகராறு

Added : ஜூன் 12, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 ஆக்கிரமிப்பு அகற்ற சென்ற அதிகாரியிடம் தகராறு

திருப்பூர்: திருப்பூரில், ஆக்கிரமிப்பு அகற்றச் சென்ற அதிகாரியின் சட்டையை, ஆக்கிரமிப்பாளர் ஒருவர், கிழித்து தகராறு செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் நகரில், பெரும்பாலான சாலைகளில், ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால், வாகன போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுவதும், முக்கிய சாலைகளில், வாகன நெரிசல் ஏற்படுவதும், சகஜமாக உள்ளது.யூனியன் மில் ரோட்டில், நொய்யல் கரை முதல், ஊத்துக்குளி சாலை வரை, ஏராளமான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்து, ஹாலோ பிளாக் கட்டடம், பந்தல், ஷெட் அமைத்து, பயன்படுத்தி வந்தனர்.நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில், போலீஸ் பாதுகாப்புடன், மாநகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டனர். பொக்லைன் உதவியுடன், மாநகராட்சி ஊழியர்கள், ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினர்.

அப்போது, ஒரு கட்டடத்தின் முன்பிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாகனத்தில் ஏற்றினர். அதில் வசிக்கும் ஒரு நபர், ஊழியர்களை தடுத்து, தகராறு செய்தார்.இதை தட்டிக்கேட்ட மாநகராட்சி பொறியாளர் கோவிந்த பிரபாகரனை, அந்நபர், சட்டையை பிடித்து இழுத்து, கிழித்தார்.மாநகராட்சி ஊழியர்கள் சுற்றி வளைக்க, அந்நபர் தப்பியோடினார். போலீசார், அவரை பிடித்து விசாரித்ததில், அவர் பெயர் பழனி என்பதும், 'டாஸ்மாக்' பாரில் வேலை செய்வதும் தெரிந்தது. அவரை எச்சரித்து, அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
13-ஜூன்-201921:24:21 IST Report Abuse
 nicolethomson கப்பு சரக்கு போலி மிடுக்கு பன்றிகள் தயவு செய்து இந்த மாதிரி விஷயங்களை ஆதரிக்க வேண்டாம் , முகநூலில் வேறு விதமாக திரித்து எழுத ஆரம்பித்து விட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
13-ஜூன்-201916:10:40 IST Report Abuse
Bhaskaran ஏதேனும் இரு கழகங்களொன்றின் ஆதரவாளராக இருப்பார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X