சம்பவம் செய்தி

தமிழ்நாடு

4 கூரை வீடு எரிந்து சாம்பல்

Added : ஜூன் 12, 2019
Advertisement
 4 கூரை வீடு எரிந்து சாம்பல்

மங்கலம்பேட்டை: மங்கலம்பேட்டை அருகே, மின் கசிவு காரணமாக, நான்கு கூரை வீடுகள் எரிந்து, சாம்பலாகின.கடலுார் மாவட்டம், மங்கலம்பேட்டை அடுத்த, பள்ளிப்பட்டு கிராமத்தில், நேற்று காலை, 11:00 மணிக்கு, சூறைக் காற்று வீசியது. அப்போது, ராமர், 60, என்பவரின், வீட்டு மேற்கூரையின் மேல் சென்ற மின் கம்பிகள், ஒன்றோடு ஒன்று உரசியதில், தீப்பொறி பறந்தது. அதில், ராமரின் வீடு தீப்பற்றியது. சூறை காற்றால், அருகிலிருந்த மூன்று கூரை வீடுகளுக்கும், தீ பரவியது.தகவலறிந்து வந்த, மங்கலம்பேட்டை, விருத்தாசலம், உளுந்துார்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள், அரை மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். இவ்விபத்தில், நான்கு வீடுகளும் முற்றிலும் எரிந்தன. மொத்தம், 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகின.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X