பொது செய்தி

தமிழ்நாடு

காரைக்கால் சனீஸ்வரர் கோவிலில், தேர் திருவிழா கோலாகலம்

Added : ஜூன் 12, 2019
Advertisement
 காரைக்கால் சனீஸ்வரர் கோவிலில்,  தேர் திருவிழா கோலாகலம்

காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில் பிரம்மோற்சவ விழாவில், நேற்று நடைபெற்ற தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்.காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

இங்கு, சனீஸ்வர பகவான், தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார். இக்கோவிலில் பிரம்மோற்சவ விழா, கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.கடந்த 30ம் தேதி முதல் 1ம் தேதி வரை விநாயகர் உற்சவம், 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை சுப்பிரமணிய சுவாமி உற்சவம், 5ம் தேதி அடியார் நால்வர் புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடந்தது.7ம் தேதி செண்பக தியாகராஜ சுவாமிகள் உன்மத்த நடனத்துடன் வசந்த படத்திலிருந்து யதா ஸ்தானத்திற்கு எழுந்தருளினார்.

நேற்று முன் தினம் பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்தனர்.முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. செண்பக தியாகராஜர், நீலோத்தம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து சுவாமிகளும் தனித் தனி தேரில் எழுந்தருளினர்.தேரோட்டத்தை, வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன், கலெக்டர் விக்ரந்த் ராஜா, கோவில் நிர்வாக அதிகாரி சுந்தர், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமி ஆகியோர் வடம்பிடித்து துவக்கி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் 'தியாகராசா தியாகராசா' என கோஷம் எழுப்பி, பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.ஐந்து தேர்களும் தெற்கு வீதியில் புறப்பட்டு வடக்கு, மேற்கு வீதிகள் வழியாக நிலைக்கு வந்தடைந்தன.இன்று 13ம் தேதி, சனீஸ்வர பகவான் தங்க காக்கை வாகனத்தில் வீதியுலா வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X