பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ஜூலை 15ல் சந்திரயான் - 2

பெங்களூரு: ''சந்திரயான் - 2 விண்கலம், வரும், ஜூலை, 15ல் விண்ணில் ஏவப்படும்,'' என, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின் தலைவர், கே.சிவன் தெரிவித்து உள்ளார்.

சந்திரயான்-2,விண்கலம்,இந்திய விண்வெளி ஆய்வு,தலைவர்,சிவன்


நிலவில் ஆய்வு செய்வதற்காக, இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பால், சந்திரயான் விண்கலம், 2008, அக்., 22ல் ஏவப்பட்டது. இரண்டாண்டுகள் இந்த விண்கலம் இயங்கும் என, கூறப்பட்டது. ஆனால், விண்ணில் செலுத்தப்பட்ட, 312 நாட்களுக்கு பிறகு எதிர்பாராத விதமாக சந்திரயானின்

தரைக்கட்டுப்பாடு நிலையத்துடனான இணைப்பு செயல்படவில்லை.

மொத்தம், 10 மாதங்களே செயல்பட்டாலும் சந்திரயான் தன் திட்ட நோக்கத்தில், 95 சதவீதத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததாக விஞ்ஞானிகள் அறிவித்தனர். நிலவில் நீர்வளம் உள்ளது என்பதை, இந்த விண்கலம் உறுதி செய்தது. அதைத் தொடர்ந்து, நிலவுக்கு மீண்டும் ஆளில்லா விண்கலம் அனுப்புவதற்கான பணியில், இஸ்ரோ ஈடுபட்டு வந்தது. வரும், ஜூலை, 9 - 16க்குள், சந்திரயான் -2 விண்கலத்தை ஏவுவதற்குதிட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ''ஜூலை, 15, அதிகாலை, 2:51 மணிக்கு, சந்திரயான் -2 விண்கலம், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும்,'' என, இஸ்ரோ தலைவர், கே.சிவன் அறிவித்து உள்ளார். இந்த விண்கலம், செப்., 6 அல்லது 7ம் தேதி, நிலவை சென்றடையும். நிலவில் இதுவரை யாரும் ஆய்வு செய்யாத,

Advertisement

அதன் தென்முனையில், இந்த விண்கலம் தரையிறங்கி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளது.

மொத்தம், 3.8 டன் எடையுள்ள இந்த விண்கலம், ஜி.எஸ்.எல்.வி., மார்க் - 3 ராக்கெட் மூலம் அனுப்பப்பட உள்ளது. சந்திரயான் - 2 விண்கலம், 603 கோடி ரூபாயிலும், அதை ஏந்தி செல்லும், ஜி.எஸ்.எல்.வி., மார்க் - 3 ராக்கெட், 375 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளன.இந்த விண்கலத்துடன், 13 ஆய்வுக் கருவிகளும் அனுப்பப்பட உள்ளன.


Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selva - CHENNAI,இந்தியா
13-ஜூன்-201915:02:32 IST Report Abuse

Selva வாழ்த்துக்கள்....மென்மேலும் முன்னேற வாழ்க வளர்க இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின் திறமை...-indian..

Rate this:
blocked user - blocked,மயோட்
13-ஜூன்-201905:45:02 IST Report Abuse

blocked userவிண்வெளி சகாப்தத்தின் அடுத்த மயில்க்கல். சாதிக்க வாழ்த்துக்கள்.

Rate this:
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
13-ஜூன்-201904:48:36 IST Report Abuse

sankarமுந்தி மகன் தலைவரா இருக்கும்போது விட்டாங்க இப்போ அப்பா தலைவரா இருக்கும் பொது விடுறாங்க வாழ்த்துக்கள் . அதாங்க மயில்சாமி(முருகன் ) & சிவன்

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X