ஜாகீர் நாயக்கை அனுப்ப முடியாது: மலேசிய பிரதமர் அறிவிப்பு

Updated : ஜூன் 12, 2019 | Added : ஜூன் 12, 2019 | கருத்துகள் (62)
Advertisement

கோலாலம்பூர் : இந்தியாவில் பயங்கரவாதத்தைப் பரப்பியது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி மலேசியாவிற்கு தப்பிச் சென்ற இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக்கை இந்தியாவுக்கு நாடு கடத்தமாட்டோம் என மலேசிய பிரதமர் மகாதிர் முகமது கூறியுள்ளார்.






மும்பையைச் சேர்ந்த 'இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன்' அமைப்பின் நிறுவனர் ஜாகீர் நாயக் 53. இவர் மீது இளைஞர்களை பிற மதத்தினருக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட துாண்டியது மற்றும் கறுப்பு பண மோசடி உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனால் 2016 ஜனவரியில் இந்தியாவில் இருந்து வெளியேறி மலேசியாவில் தஞ்சமடைந்தார். அங்கு நிரந்தரக் குடியுரிமையும் பெற்றுள்ளார்.

இவருக்கு வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் நிதி வந்துள்ளது. அப்பணத்தில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் தன் பெயரிலும் குடும்பத்தினர் பெயரிலும் கோடிக்கணக்கில் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளார். இவை அனைத்தும் கறுப்புப் பணமாகும்.





இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. அவரை மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் ''இந்தியாவில் நியாயமான விசாரணை நடைபெறாது என ஜாகீர் நாயக் கருதுகிறார். எனவே அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த மாட்டோம். அதற்கான உரிமை மலேசியாவுக்கு உள்ளது'' என அந்நாட்டு அதிபர் மகாதிர் முகமது கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.kausalya - Chennai,இந்தியா
13-ஜூன்-201913:15:31 IST Report Abuse
S.kausalya இவனெல்லாம் இங்க வந்து என்ன கிழிக்க பொரான் அங்கேயே இருக்கட்டும்
Rate this:
Share this comment
Cancel
13-ஜூன்-201912:54:43 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் மத வெறி கண்ணை மறைகிறது. தூ கேவலம்
Rate this:
Share this comment
Cancel
13-ஜூன்-201912:53:57 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் ///'இந்தியாவில் நியாயமான விசாரணை நடைபெறாது என ஜாகீர் நாயக் கருதுகிறார்/// இவங்க நாட்டில் திருடனே எந்த கோர்ட்டில் எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்று முடிவு செய்வார்கள் போல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X