இன மோதல்; ஒரே இரவில் 100 பேர் கொலை

Added : ஜூன் 12, 2019 | கருத்துகள் (2)
Advertisement

பமாகோ: மாலி நாட்டில் இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒரே இரவில் 100 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்று மாலி. மத்திய மாலியில் உள்ளது சோபன் கோ கிராமம். இங்கு புலானி எனும் பழங்குடியினர் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கும் அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் டோகோன் இனத்தவருக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம்.சில நாட்களுக்கு முன் இரவில் சோபன் கோ கிராமத்துக்குள் நுழைந்த டோகோன் இன கும்பல் ஒன்று துாங்கிக் கொண்டிருந்த கிராமவாசிகளை துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் கொடூரமாக கொலை செய்தனர். வீடுகள் அனைத்தையும் தீ வைத்து எரித்தனர். இதில் 100 பேர் உயிரிழந்தனர். 19 பேர் நிலை என்ன ஆனது என்பது தெரியவில்லை. ஒரு இரவில் அந்த கிராமமே அழிக்கப்பட்டுள்ளது.மூன்று வாரங்களுக்கு முன் டோகோன் இனத்தை சேர்ந்த 160 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இதை புலானி இனத்தவர் செய்தனர் என்று கூறப்பட்ட நிலையில் அதற்கு பழிவாங்கும் வகையில் இந்த கொடூர கொலை அரங்கேறியுள்ளது.

இதுகுறித்து மாலி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ''இது பயங்கரவாத தாக்குதல்; ஜிகாதி குழுவைச் சேர்ந்த சிலர் 2015 முதல் அப்பகுதியில் மதப் பிரசாரம் செய்தனர். அதன்பின்பே மத்திய மாலியில் இதுபோன்ற மோசமான கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அந்த கிராமத்திற்கு போலீசாரும் ராணுவத்தினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்'' என்று தெரிவித்துள்ளார்.மத்திய மாலியில் 2018 ல் இருந்து 500 க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
perumal raja - chennai,இந்தியா
13-ஜூன்-201914:16:25 IST Report Abuse
perumal raja பூலானி மக்கள் தன டோக்கன் மக்களை கொன்றனர்
Rate this:
Share this comment
Cancel
13-ஜூன்-201900:42:16 IST Report Abuse
ஆப்பு ஆப்பிரிக்கா தானே...அவிங்க இன்னும் நம்மளை விட ஒரு ஆயிரம் ஆண்டுகள் பின் தங்கியிருக்காங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X