அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
admk,OPS,EPS,ஓ.பி.எஸ்.,இ.பி.எஸ்.,அ.தி.மு.க.,மவுனம்,ஒற்றை தலைமை

சென்னை: ஒற்றை தலைமை விவகாரத்தில் அ.தி.மு.க.,வில் மவுனம் நிலவுகிறது. பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் இப்பிரச்னை பற்றி பேச நேற்று அனுமதி மறுக்கப்பட்டது. அதே நேரத்தில் 'வெளியில் பேட்டி தரக்கூடாது' என தலைமை பிறப்பித்த உத்தரவை மீறி மந்திரிகளும் எம்.பி.,யும் கருத்து தெரிவித்தனர்.

லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின் அ.தி.மு.க.வில் சலசலப்பு ஏற்பட்டது. முதல்வர் மற்றும் துணை முதல்வர் இடையே கருத்து வேறுபாடு உருவானது. அதன் விளைவாக மதுரை வடக்கு எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா 'கட்சிக்கு ஒற்றை தலைமை தான் வேண்டும்' என குரல் எழுப்பினார். அதற்கு ஆதரவாக குன்னம் எம்.எல்.ஏ. ராமச்சந்திரனும் கருத்து தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து இந்த விவகாரம் அ.தி.மு.க.வினர் மட்டுமின்றி மற்ற கட்சியினரும் பேசும் அளவுக்கு விவாதப் பொருளானது. உஷாரான அ.தி.மு.க. தலைமை இதுபற்றி பேச கட்சியினருக்கு வாய்ப்பூட்டு போட்டது. அதேநேரத்தில் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க மாநில மாவட்ட நிர்வாகிகள் எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. அதன்படி சென்னையில் நேற்று காலை 10:00 மணிக்கு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தலைமை நிர்வாகிகள் மாவட்ட செயலர்கள் எம்.பி.க்கள் - எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது.

இதற்காக காலை 9:00 மணிக்கே கட்சி நிர்வாகிகள் அலுவலகம் வரத் துவங்கினர். காலை 9:58 மணிக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் வந்தார். காலை 10:25க்கு முதல்வர் பழனிசாமி வந்தார். இருவர் வரும் போதும் கட்சியினர் வாழ்த்து கோஷம் எழுப்பினர். 'வருங்கால பொதுச்செயலர்' என்று சிலர் கோஷமிட்டனர். காலை 10:30 மணிக்கு ஆலோசனை கூட்டம் துவங்கியது; பகல் 12:00 மணிக்கு நிறைவடைந்தது. கூட்டத்தில்

ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அவைத் தலைவர் மதுசூதனன் மட்டுமே பேசினர். மற்றவர்கள் பேச அனுமதிக்கப்படவில்லை.

ஒற்றை தலைமை பற்றி விவாதிக்க அனுமதித்தால் மோதல் வெடிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கையாக அப்பிரச்னை பற்றி பேசுவதற்கே அ.தி.மு.க. தலைமை தடை போட்டு விட்டது. அதேபோல் தேர்தல் தோல்விக்கு என்ன காரணம் என்பது பற்றியும் பேசப்படவில்லை. இவ்விரு விவகாரத்தையும் தொடாததால் நேற்றைய கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பேச ஆர்வமின்றி மவுனம் சாதித்தனர். அதேபோல தோல்விக்கு காரணமான மந்திரிகள் பற்றி கை நிறைய ஆதாரங்களுடன் வந்திருந்த மாவட்ட செயலர்களும் எம்.பி. - எம்.எல்.ஏ.க்களும் அதிருப்தி அடைந்தனர். ஆனாலும் அதை வெளிக்காட்டாமல் மவுனமாக கலைந்தனர்.

அவர்கள் வெளியே சென்று பத்திரிகையாளர்களிடம் இந்த விவகாரம் பற்றி பேசி விடக் கூடாது என்பதால் கூட்டம் முடிந்ததும் அ.தி.மு.க. தலைமையிடம் இருந்து அவசர அறிக்கை வந்தது. அதில்'ஊடகங்களில் யாரும் எத்தகைய கருத்தும் தெரிவிக்கக் கூடாது.

அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' எனஎச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அதை கண்டுகொள்ளாமல் அமைச்சர்கள் வழக்கம்போல் பேட்டி அளித்தனர்.

அதன் விபரம்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி: சிரித்து கொண்டே உள்ளே போனோம்; சிரித்து கொண்டே வெளியே வந்தோம். எந்த பிரச்னையும் இல்லை. அடுத்து வெற்றி பெறுவது குறித்தும் தேர்தல் முடிவு குறித்தும் ஆலோசித்தோம். கட்சி தலைமை குறித்த கருத்தே எழவில்லை; தற்போதைய தலைமை நீடிக்கும். இதை அனைவரும் ஏற்றுள்ளனர். முதல்வரும் துணை முதல்வரும் கலந்து பேசி பொதுக்குழு குறித்து முடிவெடுப்பர்.

அமைச்சர் ஜெயகுமார்: தேர்தல் முடிந்த பின் வழக்கமான ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைமை குறித்து எதுவும் பேசவில்லை. கட்சிக்கும் ஆட்சிக்கும் எந்த பாதகமும் இல்லை. உள்ளாட்சி தேர்தல் கட்சி வளர்ச்சி குறித்து பேசப்பட்டது. ஒற்றை தலைமை கோரிக்கை இனி எழ வாய்ப்பில்லை.

ராஜ்யசபா எம்.பி. வைத்திலிங்கம்: இரட்டை தலைமையில் எந்த மாற்றமும் இல்லை. பொதுச்செயலர் என்ற பேச்சுக்கே இடமில்லை. மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து தலைமை முடிவெடுக்கும்.

எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா: ஒற்றை தலைமை தான் வேண்டும் என்ற பந்தை எறிந்துள்ளேன். நடப்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பா.ஜ.,வுக்கு நன்றி!

டில்லியில் பிரதமரை வழிமொழியும் வாய்ப்பை அ.தி.மு.க.விற்கு அளித்ததற்காக நேற்றைய கூட்டத்தில் பா.ஜ.விற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டளித்த வாக்காளர்களுக்கும் வெற்றிக்கு உழைத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. 'விரைவில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில் சிறப்புடன் பணியாற்றி ஜெயலலிதா போல் மகத்தான வெற்றியை பெற உறுதி ஏற்போம். உள்ளாட்சி தேர்தல் பணிகளை உடனடியாக துவக்கி மக்கள் மனங்களை வென் றெடுப்போம்' என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


நிர்வாகிகள் ஏமாற்றம்!

தேர்தலுக்கு பின் நடக்கும் முதல் கூட்டம் என்பதால் மாவட்ட செயலர்கள் எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு கூட்டத்தில் பேச வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு இருந்தனர். ஆனால் பேச வாய்ப்பு அளிக்கப்படாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் கட்சி தலைமை குறித்து விவாதிக்க தடை போட்டதால் மாநில நிர்வாகிகளும் மந்திரிகளும் பேச ஆர்வம் காட்டவில்லை என அ.தி.மு.க. வட்டாரம் தெரிவித்தது.


'கேரட் அல்வா!'

கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் அனைவருக்கும் ஆவின் நிறுவனத்தின் 'மோர்' மற்றும் 'மில்க் ஷேக்' வழங்கப்பட்டது. மேலும் வறுத்த முந்திரி, கேரட் அல்வாவும் தரப்பட்டது.Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
13-ஜூன்-201918:52:17 IST Report Abuse

D.Ambujavalliதோல்விக்கான காரணம் என்றால் சேலம், தருமபுரி என்று மானம் போய்விடுமே அதனால்தான் நிர்வாகிகளுக்கு நல்ல, நெய்ஒழுகும் அல்வா கொடுத்து விட்டார்கள்

Rate this:
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
13-ஜூன்-201917:08:11 IST Report Abuse

தமிழ் மைந்தன்ஒரு ஓரமாக வருத்த முந்திரி தட்டு மற்றும் கேரட் அல்வாவுடன் வைகோபாலசாமியா??

Rate this:
R.PERUMALRAJA - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஜூன்-201911:12:51 IST Report Abuse

R.PERUMALRAJAஇருவரும் ஒன்றாக ஆ தி மு க தலைமை அலுவலகத்தில் போஸ் கொடுத்தார்கள் , பின் இருவரும் கவர்னர் முன் போஸ் கொடுத்தார்கள் பிறகு அறிவாலயம் சென்று போஸ் கொடுத்துஇருப்பார்கள் பின் தினகரனின் அடையார் வீடு முன் போஸ் கொடுத்து இருப்பார்கள் ......கத்திரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்கு வந்து தான் ஆகவேண்டும் . நாற்றம் வீச துவங்கிவிட்டது எதைக்கொண்டு மறைத்தாலும் இனி புரயோசனம் இல்லை

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-ஜூன்-201912:19:52 IST Report Abuse

தமிழ்வேல் கமலாலயத்தை அதுக்குள்ளே மறந்துட்டாங்களா ? ...

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X