பதிவு செய்த நாள் :
'நமக்கு வேண்டாம்!'
பாக்., வான்வழி நிராகரிப்பு

புதுடில்லி: பாகிஸ்தான் வான் எல்லையை, பிரதமர் மோடிக்காக திறக்க, அந்நாடு முன் வந்த நிலையில், பிரதமர் மோடி அரசு, அதை ஏற்க மறுத்துள்ளது. வேறு வான் வழி பாதையில், கிர்கிஸ்தான் நாட்டிற்கு செல்லும் வகையில், மோடியின் பயணத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்தியா,India,Pakistan,பாகிஸ்தான்,வான் வழி,நிராகரிப்பு


மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான, கிர்கிஸ்தானின் தலைநகர், பிஷ்கெக் நகரில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின், வருடாந்திர மாநாடு, நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்க உள்ளது. இந்த அமைப்பின் உறுப்பு நாடாக இந்தியா உள்ளது. இதில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

இதற்காக, டில்லியிலிருந்து பிஷ்கெக் நகருக்கு, பாகிஸ்தான் வான் வழியே செல்வது தான், எளிதான பாதை.

ஆனால், பிப்ரவரி, 26ல், பாகிஸ்தானின் பாலகோட் என்ற இடத்தில், பயங்கரவாதிகள் மீது, இந்திய விமானப்படைகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, இந்திய விமானங்கள், பாகிஸ்தான் வான் எல்லையில் பறக்க, அந்நாடு தடை விதித்துள்ளது.

'பிரதமர் மோடியின் விமானம், பாகிஸ்தான் வான் எல்லை வழியே, பிஷ்கெக் செல்ல அனுமதிக்க வேண்டும்' என, இந்திய வெளியுறவுத்துறை, சில நாட்களுக்கு முன், பாகிஸ்தானிடம் வேண்டுகோள் விடுத்தது; அதை, பாகிஸ்தானும் ஏற்றுக் கொண்டது.

எனினும், பாகிஸ்தான் வான் எல்லையை பயன்படுத்த விரும்பாத மத்திய அரசு, ஓமன், ஈரான் நாடுகள் வழியாக, கிர்கிஸ்தானுக்கு சுற்றிச் செல்ல முடிவு செய்துள்ளது.

Advertisement

இது, காதைச் சுற்றி, மூக்கை தொடும் முயற்சி தான். எனினும், பயங்கரவாதத்திற்கு ஆதரவான பாகிஸ்தானின் போக்கில், மாற்றம் ஏற்படும் வரை, அந்நாட்டுடன் எவ்வித உறவையும் வைத்துக் கொள்ள, மத்திய அரசு விரும்பவில்லை என்பதை, இது காட்டுகிறது.

ஷாங்காய் மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கானும் பங்கேற்க உள்ளார். எனினும், அவருடன், பிரதமர் மோடி பேசப் போவதில்லை என்பதும் உறுதியாகியுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
13-ஜூன்-201921:24:19 IST Report Abuse

தமிழ்வேள்பாக் வான்வழியில் போகாமலிருப்பது தற்போதைக்கு நலம் ஏதாவது ஏடாகூடமாக செய்துவிட்டு பிறகு காபிர் ஹலால் சுவர்க்கம் ஜிஹாத் என்று குரான் ஹதீஸை துணைக்கு இழுப்பார்கள் எனவே இந்த குல்லாக்கூட்டம் முற்றிலும் முடங்கவைக்கப்படும் வரை பாக் வான வழியை பயன்படுத்தவேண்டாம் . மோடிஜியின் பாதுகாப்பு மிக முக்கியம்

Rate this:
venkatan - Puducherry,இந்தியா
13-ஜூன்-201917:01:52 IST Report Abuse

venkatanIt is obvious that the Pakistan's defense is pro terrorist groups.It is secret .

Rate this:
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
13-ஜூன்-201914:48:57 IST Report Abuse

Sridhar Rengarajanபெரிய விமான நிலையங்களில் டெல்லியில் இருந்து புறப்பட்டு அரபுநாடுகளுக்கு ஐரோப்பாவுக்கு செல்லும் விமானங்களுக்கு மட்டும்தான் இடைஞ்சல். இதுவே பாகிஸ்தானுக்கு வைக்கும் நாம் வைக்கும் ஆப்பு அவர்களால் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒன்று.. நம் வான் எல்லையை பயன்படுத்தாமல் அவனுங்க பாடுதான் நாய்ப்படாத பாடு. பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் அதிக விமானங்களை இயக்கம் வழித்தடங்களான சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா, போர்னியோ, தாயலாந்து, பர்மா பங்களாதேஷ் தைவான் போன்ற நாடுகளுக்கு இந்திய வான் எல்லையை பயன்படுத்தாமல் சுற்றி சென்றால் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் ஆறு மாதங்களில் திவாலாகிவிடும். மோடி பாகிஸ்தானுக்கு வைப்பது செம ஆப்பு.

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-ஜூன்-201920:47:06 IST Report Abuse

தமிழ்வேல் அவனுவோக்கிட்டே இருக்கிறதே ரெண்டு பிலைட் தான்னு ஒருத்தர் நேத்தி சொன்னாரே.... இந்திய வான் வெளியையும் தொறந்தாச்சி. ...

Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X