'வேறொரு நாட்டுக்கு தப்பி செல்வான்' நிரவ் மோடிக்கு லண்டன் கோர்ட் ஜாமின் மறுப்பு

Added : ஜூன் 12, 2019
Advertisement

லண்டன்: வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டதால், ஐரோப்பிய நாடான பிரிட்டனின், லண்டனுக்கு தப்பிச் சென்ற வைர வியாபாரி, நிரவ் மோடிக்கு, ஏற்கனவே மூன்று முறை ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில், அந்த நாட்டு உயர் நீதிமன்றமும், ஜாமின் வழங்க மறுத்து உள்ளது.

'பஞ்சாப் நேஷனல் வங்கி'யில் கடன் உத்தரவாதம் பெற்று, 13,600 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, வைர வியாபாரி, நிரவ் மோடி மீது, பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அதைத் தொடர்ந்து, அவன் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றான். ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் லண்டனில், அவன் இருப்பது தெரிய வந்ததும், அவனை நாடுக் கடத்தும் முயற்சியில், மத்திய அரசு ஈடுபட்டது.இது தொடர்பான வழக்கு, லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதன் அடுத்த விசாரணை, ஜூலை, 29ல் நடக்கவுள்ளது.இந்தாண்டு மார்ச் முதல், லண்டன் சிறையில், நிரவ் மோடி அடைக்கப்பட்டுள்ளான். ஜாமின் கேட்டு, அவன் ஏற்கனவே மூன்று முறை தாக்கல் செய்த மனுக்களை, லண்டன் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இந்நிலையில், ஜாமின் கோரி அவன் தாக்கல் செய்த மனுவை, லண்டன் உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. ஜாமின் மறுத்து, நீதிபதி, இன்கிரிட் சிம்லர் கூறியதாவது:கடந்த சில மாதங்களாகத் தான், நிரவ் மோடிக்கும், பிரிட்டனுக்கும் இடையே தொடர்பு உள்ளது. இங்கு அவன் மீது எந்த வழக்கும் இல்லை. ஆனாலும், தன் மீது, இந்தியாவில் தொடரப்பட்ட வழக்குகளில் ஆஜராகாமல், தப்பி வந்து உள்ளான்.இங்கு ஜாமின் அளித்தால், அவன் வேறொரு நாட்டுக்கு தப்பிச் செல்ல மாட்டான் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது. மேலும், அவன் சாட்சிகளை மாற்றுவதற்கான அபாயமும் உள்ளது என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், ஜாமின் வழங்க முடியாது.இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

இது, நிரவ் மோடிக்கு, மிகப் பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவனை, நாடு கடத்துவது தொடர்பான வழக்கும் தீவிரமடைந்துள்ளது. நாடு கடத்தப்பட்டால், அவனை சிறையில் அடைப்பதற்கான ஏற்பாடுகளையும், மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள ஆர்தர் சாலை சிறை நிர்வாகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X