பதிவு செய்த நாள் :
முற்றுகை!
போலீசை கண்டித்து பா.ஜ., தலைவர்கள்..
மே.வங்கத்தில் கண்ணீர் புகை குண்டு வீச்சு

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியினரின் வன்முறையை கண்டித்து, போலீஸ் தலைமையகத்தை முற்றுகையிடச் சென்ற, பா.ஜ.,வினர் மீது, போலீசார், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலைத்தனர். தடியடியில் பலர் காயமடைந்தனர். மாநிலத்தில் நடந்து வரும் தாக்குதல்கள் குறித்து விவாதிக்க, இன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு, கவர்னர், கே.என்.திரிபாதி அழைப்பு விடுத்துள்ளார்.

bjp,பா.ஜ.,முற்றுகை,கண்ணீர் புகை குண்டு வீச்சு


மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் அரசு உள்ளது. தொடர்ந்து, 32 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியால் மீண்டும், ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை. கடந்த, 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 294 இடங்களில், 211 இடங்களை, ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கைப்பற்றியது. ஐந்தாண்டுகளுக்கு முன், ஆளும் கட்சியாக விளங்கிய கம்யூ.,க்கள், 32 இடங்களை மட்டுமே பெற்றனர்.

பார்வை:


சில தேர்தலுக்கு முன் வரை, ஒரு, எம்.எல்.ஏ., கூட இல்லாத, பா.ஜ.,வுக்கு, மூன்று, எம்.எல்.ஏ.,க்கள் கிடைத்தனர். அதுவரை, கம்யூ.,க்களை எதிரி கட்சியாக கருதிய மம்தாவின் பார்வை, பா.ஜ.,வுக்கு மாறியது.

வளர்ந்து வரும், பா.ஜ.,வை நசுக்க, என்னென்ன செய்ய முடியுமோ அவ்வளவையும் செய்து வருகிறார். எனினும், அக்கட்சி அசுர வளர்ச்சி பெற்று வருகிறது. இது, மம்தாவுக்கு கோபத்தை அதிகரித்து உள்ளது.

கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், திரிணமுல் காங்., 34; காங்கிரஸ், 4; கம்யூ.,க்கள் 2 இடங்களில் வென்ற நிலையில், பா.ஜ.,வும், 2 இடங்களை கைப்பற்றியது, மம்தாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு ஏற்பட்ட வன்முறைகளால், திரிணமுல் காங்., - பா.ஜ., என, இரு தரப்பிலும், நுாற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த, 2019 லோக்சபா தேர்தலில், மம்தாவுக்கு மேலும் அதிர்ச்சியை அளிக்கும் வகையில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றுள்ளது.

வன்முறை:


மொத்தமுள்ள, 42 தொகுதிகளில், திரிணமுல் காங்., 22 இடங்களில் வென்ற நிலையில், பா.ஜ., 18 இடங்களை கைப்பற்றியது. அதன் பிறகு, அந்த மாநிலத்தில், தேர்தலுக்கு பிந்தைய வன்முறை அதிகரித்துள்ளது. திரிணமுல் காங்., கட்டவிழ்த்து விட்ட வன்முறையில், 50க்கும் மேற்பட்ட, பா.ஜ.,வினர் இறந்துள்ளதாக, அக்கட்சி தெரிவிக்கிறது. ஆனால், 10க்கும் குறைவானவர்கள் தான் கொல்லப்பட்டுள்ளனர் என, திரிணமுல் காங்கிரஸ் கூறுகிறது.

இந்நிலையில், கடந்த வாரம் சனிக்கிழமை, சந்தோஷ்காலி என்ற இடத்தில், பா.ஜ.,வினர் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் புகுந்து, திரிணமுல் காங்கிரசார் நடத்திய வெறியாட்டத்தில், மூன்று பேர் கொல்லப்பட்டனர். இதை கண்டித்து, புதன் கிழமை, கோல்கட்டாவில் பேரணி நடத்தப்படும் என, பா.ஜ., அறிவித்து இருந்தது.

Advertisement

அதன்படி, குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, பா.ஜ., - எம்.பி.,க்கள், மாநில, பா.ஜ., தலைவர், திலிப் கோஷ், மூத்த தலைவர்கள் உட்பட ஏராளமானோர், லால் பஜார் பகுதியில் உள்ள, போலீஸ் தலைமையகத்தை முற்றுகையிட, நேற்று சென்றனர்.

தடியடி:


அவர்களை வழியிலேயே தடுத்து நிறுத்திய போலீசார், தண்ணீரை பீய்ச்சி அடித்து, கலைத்தனர். எனினும், முன்னேறியவர்கள் மீது, கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன; தடியடியும் நடத்தப்பட்டது. இதில், ஏராளமானோர் காயம் அடைந்தனர். பா.ஜ.,வினர் ஆங்காங்கே, சாலையில் அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் நடந்த முற்றுகையால், கோல்கட்டா நகரமே போர்க்களம் போல காட்சியளித்தது.

மேற்கு வங்கத்தில் நடந்து வரும் அரசியல் படுகொலைகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் கவலை தெரிவித்து, அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது, அரசியல் நோக்கம் கொண்டது என, மம்தா கூறியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சராக, பா.ஜ., தலைவர், அமித் ஷா உள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (11+ 10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
periasamy - Doha,கத்தார்
13-ஜூன்-201921:27:09 IST Report Abuse

periasamyஇன்று மேற்கு வங்கம் நாளை பிற மாநிலம்

Rate this:
J.Isaac - bangalore,இந்தியா
13-ஜூன்-201921:18:49 IST Report Abuse

J.Isaacஜனாதிபதி ஆட்சிக்கு தயாராகிறது மேற்கு வங்காளம். வாழ்க பாரதம் . வளர்க இந்தியா . புது இந்தியாவை உருவாக்குவோம் .

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
13-ஜூன்-201916:02:15 IST Report Abuse

Endrum Indianசெய்றதை சீக்கிரமாக செய்யுங்கள் மோடி அய்யா???இவ்வளவு கால தாமதம் முஸ்லீம் பேகம் மும்தாஜுக்காக பார்க்க வேண்டியதில்லை???பிஸ்ஸா, ஜல்தி , தாடா தோடி, வெர்ஸா, தொந்தரகா, Fast, சீக்கிரமாக கதைக்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள்.

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X