பதிவு செய்த நாள் :
10 எம்.எல்.ஏ.,க்கள்
கட்சி தாவ தயார்

பனாஜி: கோவாவில், காங்., கட்சியைச் சேர்ந்த, 15 எம்.எல்.ஏ,,க்களில், 10 பேர் பா.ஜ.,வுக்கு தாவுவதற்கு தயாராக இருந்தனர். ஆனால், அதை நிராகரித்ததாக, பா.ஜ., கூறியுள்ளது.

MLA,Goa,கோவா,காங்.,BJP,பா.ஜ.,


புகார்:


கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. சட்டசபையில், மொத்தமுள்ள, 40 இடங்களில், பா.ஜ.,வுக்கு, 17 எம்.எல்.ஏ., உள்ளனர்; காங்.,க்கு, 15 பேர் உள்ளனர். பிராந்திய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன், பா.ஜ., அரசு செயல்பட்டு வருகிறது. 'காங்கிரஸ்,

எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்க, பா.ஜ., முயற்சி செய்கிறது' என, மாநில காங்., தலைவர் கிரிஷ் சோதான்கர் சமீபத்தில் புகார் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், கோவா பா.ஜ., தலைவர், வினய் டெண்டுல்கர் கூறியதாவது: பா.ஜ., அரசுக்கு, 23 எம்.எல்.ஏ.,களின் ஆதரவு உள்ளது. இவர்கள் ஆதரவுடன், இந்த அரசு, தனது பதவி காலத்தை நிறைவு செய்யும். எந்தக் கட்சியையும் உடைக்க வேண்டும் என்ற எண்ணம் பா.ஜ.,வுக்கு கிடையாது. அதே நேரத்தில், எங்களுடைய அரசின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, மற்ற கட்சியினர், இங்கு வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, 15, எம்.எல்.ஏ.,க்களில், 10 பேர், சமீபத்தில் எங்களுடைய கட்சியில் சேருவதற்கு ஆர்வம் தெரிவித்தனர்.ஆனால், அதை நாங்கள் நிராகரித்து விட்டோம்.

Advertisement



பாதுகாப்பு:


காங்., கட்சியைச் சேர்ந்த, இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் கடந்தாண்டு இறுதியில், எங்களுடன் இணைந்தனர். அவர்களுக்கும் ஒரு காசு கூட தரவில்லை. மற்றக் கட்சி, எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்க வேண்டிய நிலையில், பா.ஜ., இல்லை. தங்களுடைய, எம்.எல்.ஏ.,களை பாதுகாக்க வேண்டியது, காங்.,கின் வேலை. இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
13-ஜூன்-201916:22:03 IST Report Abuse

Endrum Indianசொல்லாதீங்க , செஞ்சு காட்டுங்க????காங்கிரஸ் என்னும் பெயர் கொண்ட எந்த கட்சியாயினும் அடியோடு ஒழியணும் இந்தியாவிலிருந்து.

Rate this:
Arsath Ali - Malaysia,மலேஷியா
13-ஜூன்-201909:34:15 IST Report Abuse

Arsath Aliகட்சி தாவல் தடை சட்டம் பிஜேபி ஆளும் மாநிலங்களில் இல்லையோ

Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
13-ஜூன்-201911:24:50 IST Report Abuse

Chowkidar NandaIndiaஒரு காலத்து எம்பிக்கள் சத்ருகன் சின்ஹா, கீர்த்தி அசாத் மற்றும் சித்து போன்றவர்கள் பாஜகவிலிருந்து கான்க்ராஸ்ஸிற்கு தாவியபோதும் இதை சொல்லியிருக்கலாமே. ...

Rate this:
சுந்தரம் - Kuwait,குவைத்
13-ஜூன்-201908:42:40 IST Report Abuse

சுந்தரம் கோவாவில், காங்., கட்சியைச் சேர்ந்த, 15 எம்.எல்.ஏ,,க்களில், 10 பேர் பா.ஜ.,வுக்கு தாவுவதற்கு தயாராக இருந்தனர். ஆனால், பேரம் படியாததால் அதை நிராகரித்ததாக, பா.ஜ., கூறியுள்ளது.

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X