எக்ஸ்குளுசிவ் செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
கவலை!
வேடிக்கை பார்க்கும் காங்.,- கம்யூ.,

'பா.ஜ.,வுக்கு கிடைத்த, 18 எம்.பி.,க்கள் வேண்டுமானால், அன்பளிப்பாக இருக்கலாம்; ஆனால், மாநிலத்தில் நடக்கும் குழப்பங்களும், குளறுபடிகளும் அப்படியில்லை' என, வங்க மொழி நாளிதழ் ஒன்றின் தலையங்கம் சொல்கிறது. அந்த நாளிதழ், மம்தாவுக்கு ஆதரவானது இல்லை. எனினும், பா.ஜ., நடத்தும் போராட்டங்களால், மாநிலத்தில் குழப்பங்கள் அதிகரித்த வண்ணமாக உள்ளது என்பது தான், அந்த நாளிதழின் கவலை.

Congress,காங்கிரஸ்,காங்.,கம்யூ.,


கோல்கட்டாவில், லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, பா.ஜ., தலைவர், அமித் ஷாவின் பேரணியின் போது ஏற்பட்ட வன்முறையில், கல்லுாரி தெருவில் இருந்த, சிந்தனையாளர், வித்யாசாகரின் மார்பளவு சிலை சேதப்படுத்தப்பட்டது. அந்த சிலையை, முதல்வர் மம்தா, நேற்று முன்தினம் திறந்து வைத்தார். மறுநாளான நேற்று, வங்கப் பத்திரிகை ஒன்றில், 'காயமடைந்த பெண் புலி, சாதாரண புலியை விட மிகவும் ஆபத்தானது' என, சிலேடையாக, அரசியல் நிலவரத்தை சுட்டிக்காட்டியிருந்தது.

இப்படி நாளுக்கு நாள், அரசியல் வன்முறை அதிகரித்ததும், கவர்னர், கே.என்.திரிபாதி, சுதாரித்து, மாநிலத்தின் நான்கு முக்கிய கட்சிகளான, திரிணமுல் காங்கிரஸ், பா.ஜ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ்

ஆகிய கட்சிகளை, இன்று நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைத்துள்ளார். இதன் மூலம், மாநிலத்தில் நிலவும் அரசியல் பதற்றத்தை தணிக்க, அவர் முயன்றுள்ளார். இதற்கிடையே, பா.ஜ., மீது அதிக கவனம் செலுத்துவதால், முதல்வர் மம்தாவால், மாநில நிர்வாகத்தின் மீது கவனம் செலுத்த முடியவில்லை. அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கையில், அதுபற்றி கவலைப்படாத மம்தா, அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க, அதிகாரிகளுடன் நேற்று தயாராக இருந்தார்.

சமீபத்தில், 75 வயது முதியவர், அரசு மருத்துவமனையில் இறந்து விட, சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என, அவரின் உறவினர்கள், இரண்டு டாக்டர்களை தாக்கியதில், அவசர சிகிச்சை பிரிவில், அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மருத்துவ சேவை, ஸ்தம்பித்துள்ளது. இதை கண்டுகொள்ளாத மம்தாவின் செயல்பாடு, அவர் மீதான கெட்ட பெயரை இன்னும் அதிகரித்துள்ளது.

'லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில், பா.ஜ.,வினர், 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்' என, பா.ஜ., தெரிவிக்கிறது. ஆனால், 'அவர்கள் திரிணமுல் காங்கிரசார்' என்கிறது, அக்கட்சி. அப்போ... இறந்தவர்கள் எந்த கட்சி என்பது, 'மில்லியன் டாலர்' கேள்வியாக இருக்கிறது. மாநிலத்தில் நடைபெறும் அரசியல் மோதல்களின் பின்னணியில், மம்தாவின் ஆட்சியை கலைப்பதற்காக, 356வது சட்டப்பிரிவை, மம்தா அரசு மீது மத்திய அரசு பிரயோகம் செய்யும் என்ற பேச்சு கிளப்பியுள்ளது.

Advertisement

அதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில், பா.ஜ.,வின் தற்போதைய முக்கிய பிரபலங்களில் ஒருவரான முகுல் ராய், '356ஐ பயன்படுத்தி ஆட்சியை கலைக்க கூடாது. அப்படி செய்தால், மம்தாவுக்கு மறுவாழ்வு கிடைத்து விடும். மாறாக, கொஞ்சம் கொஞ்சமாக அவரின் ஆட்சியை வீழ்த்த வேண்டும்' என்கிறார். இரு கட்சிகளின் சண்டையை, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் தொண்டர்கள், அமைதியாக பார்த்து ரசிக்கின்றனர். அசோக் பட்டாச்சார்யா என்ற, கம்யூனிஸ்ட் பிரபலம், 'போர்க்களத்தில், பா.ஜ., - திரிணமுல் இறங்கியாகி விட்டது. சண்டை இன்னும் பயங்கரமாகத் தான் இருக்குமே தவிர, குறைய வாய்ப்பில்லை' என்கிறார்.

பா.ஜ.,வின், 18 எம்.பி.,க்களில் ஒருவர், 'நாங்கள், 18 பேர் வென்றுள்ளோம். இதற்கு தார்மிக பொறுப்பேற்று, மம்தா, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என்கிறார். ஆனால், மம்தாவோ, தன் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை. எழுத்தாளர்களும், அறிவுஜீவிகளும் தனக்கும், தங்கள் கட்சியின் போராட்டத்திற்கும் ஆதரவு அளிக்க வேண்டும் என, அறைகூவல் விடுக்கிறார்.

- சாந்தனு பானர்ஜி -
சிறப்பு செய்தியாளர்


Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
13-ஜூன்-201919:48:22 IST Report Abuse

Rafi எங்கெல்லாம் வன்முறைகள் கட்டவிழ்த்து படுகின்றதோ அங்கெல்லாம் பிஜேபி வளர்ந்து அல்லது வெற்றி பெற்றுக்கொண்டிருக்கு என்பது வரலாறாகி கொண்டிருக்கு. மதம் என்பது ஓவ்வோருவரின் உள்ளக்கிடங்கில் இருந்து கொண்டிருப்பது தான், அதை லாவகம்மாக பிஜேபி கையாண்டு கொண்டு வெற்றியை அழகாக பெற்று கொண்டிருக்கு.

Rate this:
Siva - Aruvankadu,இந்தியா
13-ஜூன்-201915:32:06 IST Report Abuse

Sivaஆட்சியை கலைக்க பாஜ ஒன்றும் கான்கிராஸ் அல்ல. கழுதை தேய்ந்து கான்கிராஸ் ஆனது தெரியாமலா இருப்பார்கள்...

Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
13-ஜூன்-201903:46:54 IST Report Abuse

J.V. Iyerஆட்சியை கலைக்க பாஜக ஒன்றும் முட்டாளில்லை. ஒரு அமைதியான ஆட்சியை மம்தாவினால் கொடுக்க முடியவில்லை.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X