பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தை தொழிலாளர் கணக்கெடுப்பு துவக்கம்

Added : ஜூன் 12, 2019
Advertisement
 குழந்தை தொழிலாளர் கணக்கெடுப்பு துவக்கம்

அவிநாசி:குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அவிநாசி, விழுதுகள் நிறுவனம் சார்பில், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் குழந்தை தொழிலாளர் குறித்த கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது.அவிநாசி ஒன்றிய அலுவலகம் முன்பு துவங்கிய பயணத்தை, சாந்திலட்சுமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

விழுதுகள் நிறுவன இயக்குனர் தங்கவேல், துணை பி.டி.ஓ., தவமணி முன்னிலை வகித்தனர். அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்றனர். மேலும், விழுதுகள் கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சியுடன் துவங்கியது. இக்குழுவினர் கிராமம் கிராமமாகச் சென்று பள்ளி செல்லும் வயதுடைய, பள்ளி செல்லா நிலையில் உள்ள குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பை நடத்த உள்ளனர்.

அவர்கள் பள்ளிக்குச் செல்லாததற்கான காரணம் குறித்தும் ஆய்வு செய்ய உள்ளனர்.அவ்வாறு கண்டறியப்படும் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் குழந்தை தொழிலாளர்களை அந்தந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்த்து விடவும் நிறுவனத்தினர் ஏற்பாடு செய்ய உள்ளனர்.கிராமங்கள் தோறும் சென்று கலை நிகழ்ச்சி மூலம் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X