பொது செய்தி

தமிழ்நாடு

ஏழு சார் பதிவாளர் அலுவலகங்கள், 'வெறிச்' * கூண்டோடு மாற்ற ஐ.ஜி., உத்தரவு

Added : ஜூன் 12, 2019 | கருத்துகள் (1)
Advertisement

பதிவுத்துறை தலைவர், நேற்று, தஞ்சாவூர் மண்டலத்தில் நடத்திய திடீர் ஆய்வின் போது, ஏழு சார் பதிவாளர் அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்ததால், சார் - பதிவாளர்கள் மற்றும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலராக உள்ள பாலசந்திரன், பதிவுத்துறை தலைவர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார். இவர் பொறுப்பு ஏற்றது முதல், சார் - பதிவாளர் அலுவலகங்களை முறையாக பராமரிக்க வேண்டும்; உரிய நேரத்தில் அதிகாரிகள் பணிக்கு வர வேண்டும் என, உத்தரவிட்டுள்ளார்.இந்நிலையில், விழா ஒன்றில் பங்கேற்க, பாலச்சந்திரன், நேற்று தஞ்சாவூர் மண்டலத்திற்கு சென்றார். அங்கிருந்து, கண்காணிப்பு கேமரா வாயிலாக, மற்ற சார் - பதிவாளர் அலுவலகங்களின் நிலவரத்தை ஆய்வு செய்தார்.
அப்போது, தஞ்சை மண்டலத்திற்கு உட்பட்ட, உள்ளிகோட்டை, திருவோணம், சீர்காழி, சுப்ரமண்யபுரம், வலங்கைமான், மன்னார்குடி, திருக்குவளை ஆகிய, ஏழு அலுவலகங்களும், சார் - பதிவாளர்கள், பணியாளர்கள் யாரும் இல்லாமல், வெறிச்சோடிக் கிடந்தன. வழக்கமாக, காலை, 10:00 மணிக்கு சார் - பதிவாளர்கள், பணியாளர்கள் பணியில் இருக்க வேண்டும்; 10 நிமிடம் தாமதமாக வர அனுமதி உண்டு. ஆனால், காலை, 10:30 மணி வரை, யாரும் வராதது தெரிய வந்தது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட அலுவலகங்களின், சார் - பதிவாளர்கள் மற்றும் பணியாளர்களை, வேறு இடங்களுக்கு மாற்றுவது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க, பதிவுத்துறை தலைவர் பாலசந்திரன் உத்தரவிட்டார்.இதற்காக, சம்பந்தப்பட்ட நபர்களிடம் விளக்கம் கேட்கும் பணிகளை, உயரதிகாரிகள் துவக்கியுள்ளனர். பதிவுத்துறை தலைவரின் அதிரடி நடவடிக்கை, சார் - பதிவாளர்கள், பணியாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Sundararaman - Chennai,இந்தியா
13-ஜூன்-201916:02:37 IST Report Abuse
Subramanian Sundararaman பயோ மெட்ரிக் வருகை பதிவு முறை அமுல் படுத்தினால் மட்டுமே ஓரளவு சரியான நேரத்திற்கு பணியாளர்கள் வருவதை அமலாக்க முடியும் . இது எல்லா அரசு மற்றும் அரசுசார் அலுவலகங்களுக்கும் பொருத்தப்பட வேன்டும் .ஆசிரியர்களுக்கு இந்த திட்டத்தை அமல் படுத்தமுடியும்போது மற்ற துறைகளுக்கு ஏன் முடியாது ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X